• Download mobile app
04 Nov 2026, WednesdayEdition - 3920
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்கால ஏஜென்டிக் நிறுவனங்களை உருவாக்க உதவும் மாபெரும் செயற்கை நுண்ணறிவு திட்டம் ‘ வி இன்டெலிஜென்ஸ்’ வி நிறுவனம் அறிமுகம்

November 4, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வி தனது சொந்த வணிகச் செயல்பாடுகளையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களையும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படுவதற்கு உதவும் வகையில் மாபெரும் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முழுச் சக்தியையும் பயன்படுத்தி, நிறுவன நுண்ணறிவின் எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்குவதற்காக ‘ வி இன்டெலிஜென்ஸ்’ என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருப்பது வி இன்டெலிஜென்ஸ் லேப் ஆகும். பிடபிள்யூசி இந்தியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கிய பின், அவற்றை மேம்படுத்தி, உலக அளவில் விரிவுபடுத்துவதற்கான ஒரு பிரம்மாண்ட புத்தாக்க இயந்திரமாகச் செயல்படும்.

வி நிறுவனத்தின் அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நவீன மாற்றங்களை செயல்படுத்த உதவும் பிடபிள்யூசி இந்தியாவின் நிபுணத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஜாம்பவான்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் உலகளாவிய புத்தாக்க முயற்சியாக இது இருக்கும். இதன் மூலம் நிஜ உலக வணிகச் சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான துல்லியமான தீர்வுகள் காணப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில், மும்பையில் உள்ள வி நிறுவன அலுவலகத்துடன் இணைந்து செயல்படக் கூடிய பிரத்தியேக சிறப்பு மையக் குழுவை பிடபிள்யூசி இந்தியா அமைக்கவுள்ளது.’

வி இன்டெலிஜென்ஸ்’ அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த வி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜக்பீர் சிங் கூறுகையில்,

“மக்கள், வணிகங்கள் மற்றும் சாதனங்களை இணைப்பதில் தொலைத்தொடர்பு துறை நீண்ட காலமாக முக்கியப் பங்காற்றி வந்துள்ளது; ஆனால், வரவிருக்கும் எதிர்காலம் முழுவதும் ‘நுண்ணறிவுக்கே’ சொந்தமானதாக இருக்கும். அதனால், வி இன்டெலிஜென்ஸ் லேப் மூலம், உலகளாவிய ஏஐ நிபுணத்துவம், உத்தி அடிப்படையிலான கூட்டு முயற்சிகள் மற்றும் வி -ன் பிரம்மாண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஏஐ தொழில்நுட்பத்தின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வர தயாராகி வருகிறோம். வாடிக்கையாளர் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது முதல் நிறுவனங்களின் பல்வேறு செயல்முறைகளை முற்றிலும் புதிய கோணத்தில் மாற்றுவது வரை, வணிக நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை மிக எளிமையாகவும் திறம்படவும் பயன்படுத்த இந்த லேப் பெருமளவில் உதவும்.

எண்டர்பிரைஸ் இயங்கும் சூழல் முழுவதும் புதிய புத்தாக்கப் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, எதிர்காலத்திற்குத் தேவையான அனைத்துத் திறன்களையும் உருவாக்குவதற்கான வி நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பாக இந்த ‘ வி இன்டெலிஜென்ஸ் லேப்’ இருக்கும்” என்றார்.

மேலும் படிக்க