• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி

October 24, 2026 தண்டோரா குழு

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது.

தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக,அக்டோபர் 23 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு அலங்கார பொருட்கள், அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 23,24,25 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..

முன்னதாக,கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,,லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டி கண்பகாட்சியை திறந்து வைத்தார்..

இந்நிகழ்ச்சியில்,கீர்த்தனா கார்த்திக்,கவுரி, அலமேலு,மஞ்சுளா,ஜீவிதா,மஹிமா சாய் பிரியா,ஆகியோர் உடனிருந்தனர்..

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் கோ கிளாம் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,

ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள், கொல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கண்காட்சியில் ஆடை, ஆபரணங்கள், , குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள்,பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் 25 ந்தேதி வரை நடைபெற உள்ள இதில் கோவை,திருப்பூர்,ஈரோடு, நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க