October 17, 2026
தண்டோரா குழு
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் செப்டம்பர் 2026-டன் முடிவடைந்த காலாண்டிற்கான தனது நிதிச் செயல்பாடுகளை அறிவித்துள்ளது.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் முழு நேர இயக்குநரும், இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியுமான கரோல் ஃபர்டாடோ கூறியதாவது: “வளர்ச்சி வேகத்தைத் தொடர, சர்வதேச நிதிக் கழகம், பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட் ,ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவளிடமிருந்து ரூ. 409 கோடி முன்னுரிமைப் பங்கு ஒதுக்கீடு) மூலம் நிதி திரட்ட வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது; இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
தற்போதைய புத்தக மதிப்புப் பங்கின் பிரீமியம் விலையில் இந்த நிதி திரட்டப்படுவதால், செப்டம்பர் ’26 நிலவரப்படி ஒரு பங்குக்கு தோராயமாக ரூ. 0.8 லாபம் சேரும். கூடுதலாக, அக்டோபர் மாதத்தில் பத்திரமயமாக்கல் தொகுப்பை ரூ. 500 கோடி அதிகரித்து, வங்கி தனது நிதி கலவையை மேம்படுத்தியுள்ளது. வங்கியானது அதிகபட்சமாக ரூ. 365 கோடி காலாண்டு நிகர லாபத்தை ஈட்டியுள்ளது, இதில் சொத்து மீதான வருவாய்2.4% ஆகவும், பங்கு மூலதன மீதான வருவாய் 19.7% ஆகவும் பதிவாகியுள்ளன.
வலுவான கடன் விரிவாக்கம், வளர்ந்து வரும் டெபாசிட் கட்டமைப்பு, பாதுகாக்கப்பட்ட சொத்துகளின் அதிகரித்துவரும் பங்கு மற்றும் அனைத்துச் சூழலிலும் கடைபிடிக்கப்படும் நிதி ஒழுங்குமுறை ஆகியவை இந்தப் செயல்திறனுக்குக் காரணமாகும். வங்கியானது தனது வழிகாட்டுதலின் உச்ச வரம்பான 2.0% சொத்து மீதான வருவாய் இலக்கை அடைவதற்கான பாதையிலேயே தொடர்கிறது. வங்கி தனது கிளைகள் அமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்யும்.முக்கியச் செயல்பாட்டுத் திறனைப் பொறுத்தவரை, மொத்த வைப்புத்தொகை 29.2% ஆண்டு வளர்ச்சி கண்டு ரூ. 50,643 கோடியை எட்டியுள்ளதுடன், ரூ. 50,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது; இதில் காசா வைப்புத்தொகை 26.0% பங்கு வகிக்கிறது.
டெபாசிட் விலை நிர்ணயத்தின் ஆதரவுடன் வங்கி தனது நிதிக்கான செலவை 6.9% ஆகப் பராமரித்துள்ளது,எனினும் எதிர்காலத்தில் நிதிக்கான செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்த கடன் புத்தகம் 32.1% ஆண்டு வளர்ச்சி கண்டு ரூ. 45,699 கோடியாக உயர்ந்துள்ளது; இதில் பாதுகாக்கப்பட்ட கடன்களின் பங்கு 52.1% ஆக அதிகரித்துள்ளது. மைக்ரோ பேங்கிங் சொத்துகள் ரூ. 22,037 கோடியை எட்டியுள்ளன. பாதுகாக்கப்பட்ட வணிகங்களின் வளர்ச்சி 47% ஆண்டு வளர்ச்சியுடன் ஆரோக்கியமாகத் தொடர்ந்தது. மலிவு விலை வீட்டுவசதி ரூ. 10,056 கோடியை எட்டியுள்ளது, அதேசமயம் மைக்ரோ மோர்ட்கேஜ்கள் 85.7% அதிகரித்து ரூ. 2,031 கோடியாக உயர்ந்துள்ளன.