• Download mobile app
05 Oct 2026, MondayEdition - 3890
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்துறை நிறுவனங்களுக்கான எண்டர்பிரைஸ் நெட்வொர்க் பயன்பாட்டை மேலும் விரைவுபடுத்த சிஸ்கோவுடன் வி பிசினஸ் கைக்கோர்ப்பு

October 5, 2026 தண்டோரா குழு

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி’-யின் நிறுவனப் பிரிவான வி பிசினஸ் , தனது ஹைப்ரிட் எஸ்டி-வான் தயாரிப்பு பட்டியலை மெருகேற்ற சிஸ்கோ நிறுவனத்துடன் ‘மெராகி’ தளம் வாயிலாக ஒரு உத்திசார் கூட்டணியை அறிவித்துள்ளது.

வோடஃபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் என்டர்பிரைஸ் பிசினஸ் பிரிவின் தலைமை நிர்வாகி எம்.பி.சுனில் குமார் பேசுகையில்,

வி பிசினஸால் 2023-ல் தொடங்கப்பட்ட இந்த ஹைப்ரிட் எஸ்டி-வான் தீர்வு, எஸ்டி-வான், பாதுகாப்பு மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட கிளவுட் தொழில்நுட்ப தளங்களை ஒருங்கிணைக்கும் மல்ட்டி கிளவுட் இண்டக்ரேஷன் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்க உதவுகிறது.இதன் மூலம், நிறுவனங்கள் தங்களது வைட் ஏரியா நெட்வொர்க் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க உதவுகிறது.

இது லீஸ் லைன்கள்,பிராட்பேண்ட் மற்றும் செல்லுலார் நெட்வொர்க்குகள் போன்ற பல்வேறு இணைப்பு வசதிகள் வாயிலாக முழுமையான நிர்வகிக்கப்படும் சேவைகளாக வழங்கப்படுகிறது. வி பிசினஸின் ஹைப்ரிட் எஸ்டி-வான் தீர்வானது ‘சிஸ்கோ மெராகி’ தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. மெராகியின் சிங்கிள் டேஷ்போர்டு மூலமாக, செயல்திறன் மற்றும் பயன்பாடுகள் சார்ந்த ரூட்டிங், உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு, அத்துடன் இன்-பில்ட் வைஃபை மற்றும் செல்லுலார் இணைப்புகள் வாயிலாக நிறுவனங்கள் தங்களது எஸ்டி-வான் செயல்பாடுகளை மிக எளிதாக நிர்வகிக்க முடிகிறது. வி பிசினஸின் நாடு தழுவிய நெட்வொர்க் இணைப்பு ஆதரவுடன், நிறுவனங்கள் ஒற்றை தொடர்பு மையம் முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு , லைஃப்சைக்கிள் மேனேஜ்மென்ட் மற்றும் ஒருங்கிணைந்த சேவை அனுபவத்தைப் பெறுகின்றன.

சேவை அடிப்படையிலான வணிக மாதிரியில் இது வழங்கப்படுவதால், ஆரம்பக்கட்ட மூலதன முதலீடுகள் எதுவும் தேவையில்லாமல், வணிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க்கிங் தேவைகளை எளிதாக விரிவுபடுத்திக் கொள்ள முடிகிறது என்று கூறினார்.

சிஸ்கோ இந்தியா & தெற்காசிய கூட்டாளர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அசோக் சிவஷங்கர் பேசுகையில்,

“ஏஐ முதன்மை உலகத்தை நாம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நவீன நிறுவனங்களின் நெட்வொர்க்கானது மிகுந்த புத்திக்கூர்மை, பாதுகாப்பு மற்றும் தொடர் மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். வி பிசினஸுடன் இணைந்து, நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க்குகளை நிர்வகிக்கப்படும் ஹைப்ரிட் எஸ்டி-வான் தீர்வு மூலம் நவீனமயமாக்க உதவுகிறோம்; இது டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதுடன் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் விரிவாக்கத்தை மேம்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க