• Download mobile app
17 Sep 2026, ThursdayEdition - 3872
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க் கல்வி நிறுவனங்களில் ‘SPARK 2K26’ வரவேற்பு விழா!

September 17, 2026 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் கல்வி குழும வளாகத்தில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான “ஸ்பார்க் 2026” ஓரியண்டேஷன் மற்றும் ஃப்ரெஷர்ஸ் தின விழா நடைபெற்றது.

பார்க் கல்வி குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு கட்டிடக்கலைக்கல்லூரியில் சேர்ந்துள்ள 1,243 முதலாம் ஆண்டு மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.பிரேமா ரவி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழா, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆலன் ஜோஷ்வா மற்றும் கெவின் ஜோ இசையமைத்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இறை வணக்கப் பாடலுடன் தொடங்கியது.

தொடர்ந்து,தலைமை விருந்தினர் ஈரோடு மகேஷ், பார்க் கல்வி குழும தலைவர் டாக்டர் பி.வி.ரவி,தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.விழாவில் பேசிய டாக்டர் அனுஷா ரவி,மாணவர்கள் ஒழுக்கம், கல்வி மற்றும் பணித்திறன்களை வளர்த்துக்கொண்டு பெற்றோர்களை பெருமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும்,செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் உருவாகி வரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பார்க் கல்வி குழும தலைவர் டாக்டர் பி.வி. ரவி, மாணவர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, கல்வியை மதித்து தங்களது எதிர்காலத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் படைப்பாற்றல், புதுமை மற்றும் தொடர்ச்சியான கற்றல் முக்கியம் என்றும் தெரிவித்தார்.

தலைமை விருந்தினர் ஈரோடு மகேஷ், மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சிக்கல் தீர்க்கும் திறன், தெளிவான சிந்தனை மற்றும் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடாமல், தங்களது தனித்துவமான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

விழாவில்,மாணவர்கள் தங்களது எதிர்கால சுயத்திற்கு கடிதம் எழுதும் புதுமையான நிகழ்வும் நடைபெற்றது.இதில் முதலாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மாணவி ஶ்ரீ சரண்யா எழுதிய கவிதை பார்வையாளர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.மேலும், பார்க் கல்வி குழுமத்தில் சேர்ந்த முதல் 10 மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட அவர்களது AI புகைப்படங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.பார்க் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க