• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கண்ணம்பாளையம் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் செப்.13-ல் திருக்குட நன்னீராட்டு பெருவிழா!

September 8, 2026 தண்டோரா குழு

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்,வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.

கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய,பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ள விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.வி.எஸ்.டிரஸ்ட் அலுவலகத்தில் வளாகத்தில் நடைபெற்றது.இதில்,காமாட்சி புரி ஆதீனம் சிவலேங்கேஸ்வர சாமிகள் மற்றும் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் கே.வி்.குப்புசாமி ஆகியோர் பேசினர்.

கோவை குமரன் கோட்டம் அறுபடைவீடு அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வேள்விச்சாலை நிகழ்வுகள் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நவக்கிரக வேள்வி, மகாலட்சுமி பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் தொடங்குகின்றன.

தொடர்ந்து செப்டம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கால வேள்வி பூஜைகளும், மருந்து சாற்றுதல் நிகழ்வும் நடைபெறவுள்ளன.சிகர நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் சுபமுகூர்த்த வேளையில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

விழா நிறைவில் காலை 11.30 மணி முதல் வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்.இதில் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி அருள் பெற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்..

இந்த சந்திப்பின் போது சூலூர் சின்னச்சாமி மற்றும் விழா கமிட்டியினர் உடனிருந்தனர்..

மேலும் படிக்க