September 8, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி பயன்பாட்டு வாகன தயாரிப்பாளரும், 3.5 டன்னுக்குட்பட்ட எல்.சி.வி பிரிவின் தலைவருமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், புதிய ‘வீரோ 1.1 எக்ஸ்எக்ஸ்எல் சிஎன்ஜி’ மற்றும் மேம்படுத்தப்பட்ட ‘வீரோ டீசல்’ வாகனங்களின் அறிமுகத்தை அறிவித்துள்ளது.
முதன்முதலில் செப்டம்பர் 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்ட வீரோ, 3.5 டன்னுக்குட்பட்ட எல்.சி.வி பிரிவில் புதுமை மற்றும் நம்பகத்தன்மைக்கு ஒரு சிறந்த சான்றாக விளங்கி வருகிறது. சிறப்பான மைலேஜ், சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இது, இந்தியாவின் முதல் ‘மல்டி-எனர்ஜி மாடுலார் சிவி பிளாட்ஃபார்ம்’ ஆன மஹிந்திராவின் ‘அர்பன் பிராஸ்பர் பிளாட்ஃபார்ம்’ -ன் அறிமுகத்தையும் குறித்து நின்றது. புதிய வீரோ 1.1 எக்ஸ்எக்ஸ்எல் சிஎன்ஜி’ நகரத்திற்குள்ளான பயன்பாடுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 1.1 டன் சுமை திறன் மற்றும் பிரிவிலேயே சிறந்த 2900 மி.மீ (9.5 அடி) சரக்கு தளத்தைக் கொண்டிருப்பதால், சிறிய அளவிலான வாகன வடிவிலேயே அதிக அளவிலான சுமைகளை ஏற்றிச் செல்ல முடிகிறது. மேலும், இதன் 5.1 மீட்டர் திருப்பு ஆரம் நெரிசலான தெருக்கள் மற்றும் குறுகிய ஏற்றுதல்/இறக்குதல் இடங்களிலும் எளிதாக இயங்க உதவுகிறது. இந்த வாகனம் 48.5 கேடபிள்யூ ஆற்றலையும் 98 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் ‘நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்’ எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.ஏஆர்ஏஐ சான்றளிக்கப்பட்ட 21.4 கி.மீ/கிலோ எரிபொருள் செயல்திறன் மற்றும் பெட்ரோல் + சிஎன்ஜி இரண்டும் சேர்ந்து 450 கி.மீ-க்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறனுடன், புதிய வீரோ 1.1 எக்ஸ்எக்ஸ்எல் சிஎன்ஜி’ நீண்ட தூர இயக்கம் மற்றும் குறைந்த நேர நிறுத்தத்தை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் எஃப்.எம்.சி.ஜி விநியோகம், பழங்கள் மற்றும் காய்கறி போக்குவரத்து, இ-காமர்ஸ் டெலிவரிகள், பார்சல் மற்றும் கொரியர் சேவை, சந்தை சுமை போக்குவரத்து மற்றும் இதர நகரத்திற்குள்ளான தளவாடத் தேவைகளைக் இலக்காகக் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.‘வீரோ மாடல் டச்ஸ்க்ரீன், பவர் விண்டோஸ், டிரைவர் ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற இத்துறையிலேயே முதன்முறையான அம்சங்களை வழங்குகிறது. அத்துடன், இந்த அறிமுகத்தின் மூலம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல மொழிகளில் இயங்கும் குரல் கட்டளை வசதியுடன் கூடிய புதிய 26.03 செ.மீ டச்ஸ்க்ரீன் போன்ற பல புதிய அம்சங்களை மஹிந்திரா முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.
இந்த வாகனத்தில் உள்ள ‘க்ரூஸ் கன்ட்ரோல்’ வசதி, நீண்ட தூரப் பயணங்களை மிகவும் சொகுசானதாக மாற்றுகிறது. மேம்படுத்தப்பட்ட வீரோ டீசல் சீரிஸ் 2026 செப்டம்பர் 8 முதல் விற்பனைக்குக் கிடைக்கும், அதே வேளையில் வீரோ 1.1 எக்ஸ்எக்ஸ்எல் சிஎன்ஜி’ வாடிக்கையாளர்களுக்கு 2026 செப்டம்பர் 20 முதல் கிடைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.