• Download mobile app
27 Aug 2026, ThursdayEdition - 3851
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மிக பிரமாண்டமான மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் துவக்கம்.

August 27, 2026 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் கோகுலம் பார்க் ஹோட்டல் எதிரே “கோயமுத்தூர் அக்வா பார்க்” என்ற பெயரில் தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

இந்த மீன்கள் கண்காட்சி அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் மீன்கள் மற்றும் டேம் மீன்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.ஒரு கிராம் அளவில் மிக சிறிய மீன்கள் முதல் 40 கிலோ மிகப்பெரிய மீன்கள் வகை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் பொழுதுபோக்கு அம்சங்களாக கைகளில் அமரும் பறவைகள் மற்றும் நெருப்புக்கோழிகள் இந்த அரங்கில் இடம் பெற்றுள்ளன.

நமது கோவை மாநகரில் இதுவரை சில குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்து வருகிறது. இந்த “கோயம்புத்தூர் அக்வா பார்க்” மீன் கண்காட்சி அரங்கம் நமது கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழப்போகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசிக்கும் இடமாக இந்த “கோயம்புத்தூர் அக்வா பார்க்” மீன்கள் கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது. இந்த கண்காட்சி அரங்கை காண பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6:00 மணி வரை வரலாம் என்றும், குழந்தைகளுக்கு ரூபாய் 200 மற்றும் பெரியவர்களுக்கு ரூபாய் 300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் “கோயம்புத்தூர் அக்வா பார்க்” நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று இந்த கண்காட்சி அரங்கை கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் அவர்கள் துவக்கி வைத்தார்.மேலும் இந்த கண்காட்சி அரங்கிலேயே உணவுக் கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சி வளாகம் முழுவதும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் “கோயமுத்தூர் அக்வா பார்க்” மீன்கள் கண்காட்சி வளாகம் நமது கோவை மக்களின் விடுமுறை தினங்களை இனிமையாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. வந்து பாருங்கள், கண்டு மகிழுங்கள்.

மேலும் படிக்க