• Download mobile app
22 Aug 2026, SaturdayEdition - 3846
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் தலைமுறையினரின் சிந்தனையில் சமூக மாற்றம்: கோவையில் ‘Kutty Director’ Season 2 விருது விழா

August 22, 2026 தண்டோரா குழு

இளம் தலைமுறையினரிடையே சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட ‘Kutty Director’ Season 2 குறும்படப் போட்டியின் கிராண்ட் ஃபினாலே மற்றும் விருது வழங்கும் விழா, கோவை Cars 327 Showroom வளாகத்தில் நடைபெற்றது.

Cars 327, Bikes 327 மற்றும் 8D Marketing Agency நிறுவனங்களின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை,சென்னை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள், சமூக அக்கறை, இளைஞர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை மையமாகக் கொண்டு பல்வேறு குறும்படங்களைப் போட்டிக்கு சமர்ப்பித்தனர்.சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்லாமல், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த கருவி என்பதை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் போட்டி அமைந்திருந்தது.

போட்டியாளர்கள் தங்களது தனித்துவமான சிந்தனைகளையும் சமூகத்தின் மீதான அக்கறையையும் குறும்படங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.போட்டியில் சிறப்பாக செயல்பட்ட படைப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.7,500 வழங்கப்பட்டது. மேலும், திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் Best Director, Best Actor, Best Actress, Best Cinematography, Best Editing, Best Child Artist, Best Screenplay உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் திரைப்பட இயக்குநரும், Double Positive Film Academy நிறுவனருமான ரமேஷ் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளம் படைப்பாளர்களை பாராட்டினார். மேலும், அவர்கள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும் என வாழ்த்தினார்.

இளம் தலைமுறையினரின் திறமைகளை கண்டறிந்து,அவர்களுக்கு திரைத்துறையில் தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியாக ‘Kutty Director’ Season 2 அமைந்தது.குறிப்பாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் கருத்துகளை இளம் படைப்பாளர்கள் தங்களது குறும்படங்கள் மூலம் வெளிப்படுத்தியது நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இளம் திறமையாளர்களை ஒருங்கிணைத்த இந்நிகழ்வு, சமூக அக்கறையுடன் கூடிய புதிய தலைமுறை திரைப்படக் கலைஞர்களை உருவாக்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது.

மேலும் படிக்க