• Download mobile app
21 Aug 2026, FridayEdition - 3845
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரடி–முயல் வேடத்தில் போலீசார்: சாலை விதிகளை கடைப்பிடிக்க கோவையில் வித்தியாச விழிப்புணர்வு!

August 20, 2026 தண்டோரா குழு

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கணபதி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில்,போக்குவரத்து காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் லாவண்யா மற்றும் கான்ஸ்டபிள் தமிழரசன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகம் உள்ளிட்ட விதிமீறல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும்,கரடி மற்றும் முயல் பொம்மை உருவங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

“சாலை விதிகளை கடைப்பிடிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்” என்ற விழிப்புணர்வு கருத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க