• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா பெயரை நீக்க கர்நாடக அரசு மனுதாக்கல் செய்யும் – ஆச்சார்யா

February 6, 2017 தண்டோரா குழு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறியதாவது:

“ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர்-5ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவரது பெயரை நீக்கும்படி உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

இதை உச்ச நீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே, இதற்கான சிறப்பு மனு ஒன்றை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நீடிக்கும் . அவர்கள் மூன்று பேரும் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.”

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

மேலும் படிக்க