• Download mobile app
13 Aug 2026, ThursdayEdition - 3837
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாம்சங் தோஸ்த் திட்டம் ; கோவை இளைஞர் ஜீவா முருகேசனுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

August 13, 2026 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஜீவா முருகேசன், சாம்சங் இந்தியாவின் சமூகப் பொறுப்புணர்வு திட்டமான “சாம்சங் தோஸ்த்” விற்பனைப் பயிற்சி திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களை அணுகுவது, அவர்களுடன் நம்பிக்கையுடன் உரையாடுவது மற்றும் மின்னணுப் பொருட்களின் சிறப்பம்சங்களைத் தெளிவாக விளக்குவது உள்ளிட்ட திறன்களை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வகுப்பறைப் பயிற்சியுடன் நேரடி ரீடைல் அனுபவமும் வழங்கப்படுவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்குத் தேவையான நடைமுறைத் திறன்களைப் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 865 இளைஞர்களுக்கும்,இந்தியா முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கும் சாம்சங் தோஸ்த் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஜீவா முருகேசனுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பம்சங்களை விளக்குவதும் ஒருகாலத்தில் சவாலாக இருந்தது.பயிற்சிக்குப் பிறகு பொருட்கள் குறித்த அறிவையும், தகவல் தொடர்புத் திறனையும் மேம்படுத்திக் கொண்ட அவர், தற்போது வாடிக்கையாளர்களை நம்பிக்கையுடன் அணுகி விற்பனையை வெற்றிகரமாக முடித்து வருகிறார்.

இதுகுறித்து ஜீவா கூறுகையில்,

“ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களிடம் சரியாகப் பேசவோ,பொருட்களைப் பற்றி விளக்கவோ முடியவில்லை.இதனால் வாடிக்கையாளர்கள் வேறு இடத்திற்குச் சென்று விடுவார்கள்.சாம்சங் தோஸ்த் பயிற்சிக்குப் பிறகு,பொருட்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துக்கூறி விற்பனையை வெற்றிகரமாக முடிக்கத் தொடங்கினேன். இப்போது எனது மேலாளர் என்னை முழுமையாக நம்புகிறார்.
ஒரு வாடிக்கையாளரை நான் கவனித்தால், அந்த விற்பனையை நிச்சயம் முடித்துவிடுவேன் என்று அவர் நம்புகிறார்,” என்றார்.

ஜீவாவின் கற்றல் ஆர்வம், தொழில்முறை வளர்ச்சி மற்றும் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி, குருகிராமில் உள்ள சாம்சங் இந்தியாவின் பிராந்திய தலைமையகத்தில் அவருக்கு சமீபத்தில் பாராட்டு வழங்கப்பட்டது.சாம்சங் தோஸ்த் திட்டத்தின் மூலம் ஜீவா தனது தகவல் தொடர்புத் திறன், வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டுடன் பழகும் திறன் மற்றும் பொருட்களை நேரடியாகச் செய்து காட்டும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளார்.

மேலும்,இந்திய மின்னணுத் துறை திறன் கவுன்சில் மற்றும் தொலைத்தொடர்பு துறை திறன் கவுன்சில் ஆகியவற்றின் கூட்டணியுடன், தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட NSQF தரச் சான்றிதழும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளையும் தொழில்முறைத் தகுதியையும் மேலும் வலுப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்களிடம் பேசத் தயங்கிய நிலையில் இருந்து, இன்று தேசிய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ள ஜீவா முருகேசனின் பயணம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞர்களின் தன்னம்பிக்கையையும் தொழில் வளர்ச்சியையும் எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க