• Download mobile app
11 Aug 2026, TuesdayEdition - 3835
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஹான்ஸ்க்ரோஹே புதிய குளியலறைத் தயாரிப்புகள் அறிமுகம்

August 11, 2026 தண்டோரா குழு

ஜெர்மனியைச் சேர்ந்த பிரீமியம் குளியலறைத் தீர்வுகள் நிறுவனமான ஹான்ஸ்க்ரோஹே (Hansgrohe), தமிழகத்தில் தனது பாத்ரூம் தயாரிப்புகளுக்கான சந்தை இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் Avalegra மற்றும் Lavapura Element S ஆகிய புதிய தயாரிப்புகளை கோவையில் அறிமுகப்படுத்தியது.

கோவையில் ஹான்ஸ்க்ரோஹே நிறுவனத்தின் சேனல் பார்ட்னரான Purplebay Home Decors நிறுவன விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பிரீமியம் செராமிக்ஸ்,நவீன நீர் தொழில்நுட்பம் மற்றும் பயனாளர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து முழுமையான குளியலறைத் தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
நீர் சேமிப்பை மையமாகக் கொண்ட Avalegra அன்றாட பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Avalegra, பேசினுடன் ஒருங்கிணைக்கப்பட்ட parabolic spray மற்றும் swivel spout மூலம் laminar spray என இருவிதமான நீர் ஓட்டங்களை வழங்குகிறது.

இரண்டு spray முறைகளும் சிறந்த செயல்திறனை வழங்குவதுடன், ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் அளவிலேயே நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்ற Lavapura Element S
மறுபுறம், Lavapura Element S என்பது சுவரில் பொருத்தப்படும் (wall-hung) shower toilet ஆகும். தனியார் வீடுகள் மற்றும் உயர்தர விருந்தோம்பல் துறைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தயாரிப்பு, எளிதான நிறுவல், பயனர் நட்பு அம்சங்கள் மற்றும் இந்திய சூழலுக்கு ஏற்ற நம்பகமான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Hansgrohe India நிறுவனத்தின் Managing Director அப்துல்காதர் பெங்காலி கூறுகையில்,

“இந்தியாவின் பிரீமியம் பாத்ரூம் சந்தை, ஒருங்கிணைந்த மற்றும் வடிவமைப்பை மையமாகக் கொண்ட தீர்வுகளை நோக்கி தெளிவான மாற்றத்தை சந்தித்து வருகிறது. Avalegra மற்றும் Lavapura Element S போன்ற புதிய தயாரிப்புகள், நவீன வடிவமைப்பு, நீர் தொழில்நுட்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான நீர் அனுபவங்களை ஒரே தீர்வில் வழங்குவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.”

மேலும், வீட்டு உரிமையாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் சேனல் பார்ட்னர்களிடம் புதிய தயாரிப்புகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில், இந்தியா முழுவதும் தனது Hansgrohe retail network-ஐ விரிவுபடுத்தி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரீமியம் பாத்ரூம் சந்தையில் நவீன தொழில்நுட்பம், நீர் சேமிப்பு மற்றும் உயர்தர வடிவமைப்பை ஒருங்கிணைத்த தீர்வுகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு, இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க