• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆக.7 ல் துவக்குகிறது “ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா

August 4, 2026 தண்டோரா குழு

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெறுகிறது.கடந்த ஆண்டுகளில் பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் கிரெடாய் கோவை சார்பில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இது குறித்து கோவை கிரெடாய் தலைவர் அரவிந்த் குமார் எஸ்.ஆர்., செயலாளர் சஞ்சனா விஜயகுமார், பொருளாளர் மற்றும் ஃபேர்ப்ரோ 2026 தலைவர் கார்த்திக் குமார் பி. ஆகியோர் கூறும் போது :-

கோவையின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் சொத்துக் கண்காட்சியாக விளங்கும் ஃபேர்ப்ரோவில், நகரின் முன்னணி ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்க விரும்புவோர் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், 35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பாதுகாப்பு வசதியுடன் கூடிய குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், உயர்தர மனைகள், ஆடம்பர வீடுகள் மற்றும் முதலீட்டுக்கான சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை பார்வையாளர்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யலாம்.

மேலும், முன்னணி வங்கிகளும் இக்கண்காட்சியில் பங்கேற்பதால், வீட்டுக் கடன் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கவும், உடனடி நிதி ஆலோசனைகளைப் பெறவும், தங்களது தேவைக்கு ஏற்ப சிறந்த கடன் திட்டத்தைத் தேர்வு செய்து சொத்து வாங்கும் முடிவை எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.கண்காட்சி நடைபெறும் மூன்று நாள்களிலும் மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக ஃபேர்ப்ரோ சலுகைகள், வீடு வாங்குவோருக்கு கூடுதல் பலனளிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானச் செலவுகள், நில விலைகள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது வீடு வாங்குவது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தை கருத்தில் கொண்ட சிறந்த நிதி முதலீடாகவும் அமையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பல்வேறு திட்டங்கள், இடங்கள், வசதிகள், விலை விவரங்கள், நிதி வசதிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் சலுகைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பை ஃபேர்ப்ரோ வழங்குவதால், வீடு வாங்குவோர் தெளிவான மற்றும் நம்பிக்கையான முடிவை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியின் முக்கிய அம்சங்கள்: 35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள், 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள், முன்னணி வங்கிகளின் பங்கேற்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், மனைகள், பாதுகாப்பு வசதியுள்ள குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், ஆடம்பர வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், கண்காட்சி நடைபெறும் மூன்று நாள்கள் மட்டுமே இச்சலுகை வழங்கப்படும்.

இந்தக் கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சராக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுகிறது. ஜாகுவார் அண்டு கம்பெனி, ரெனாகான் மற்றும் லிங்க்ரா வயர்ஸ் அண்டு கேபிள்ஸ் ஆகியவை கோல்டன் ஸ்பான்சராக உள்ளன, ஈகிள் விண்டோஸ் மற்றும் கோனே எலிவேட்டர்ஸ் அண்டு எஸ்கலேட்டர்ஸ் ஆகியவை கார்ப்பரேட் ஸ்பான்சர்களாகவும் பங்கேற்கின்றன.

‘வீட்டு சலுகைத் திருவிழா’ என்ற அடையாளத்துடன் நடைபெறும் ஃபேர்ப்ரோ, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் மதிப்புமிக்க சலுகைகளுக்கு பெயர் பெற்றதாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது கனவு இல்லத்தை நனவாக்க இக்கண்காட்சி வழிவகுத்து வருகிறது. கவர்ச்சிகரமான விலைகள், பிரத்யேக சலுகைகள், நெகிழ்வான கட்டண வசதிகள் மற்றும் முன்னணி கட்டுமான நிறுவனங்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

வீடு வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சாதாரண சொத்துக் கண்காட்சி மட்டுமல்ல் பல்வேறு திட்டங்களை மதிப்பீடு செய்து, ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற சொத்தினை தன்னம்பிக்கையுடன் தேர்வு செய்யக்கூடிய ஒரே இடமாகவும், கண்காட்சி காலத்தில் மட்டுமே வழங்கப்படும் சிறப்புப் பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்பாகவும் ஃபேர்ப்ரோ விளங்குகிறது.

மேலும் படிக்க