August 3, 2026
தண்டோரா குழு
பாயர் நிறுவனம் தனது புதிய பூஞ்சைக் கொல்லி கண்டுபிடிப்பான ஸிவானா ஸ்மார்ட் -ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிமுகம் குறித்து பாயர் நிறுவனத்தின் கிராப் சயின்ஸ் டிவிசன் இந்திய தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மோகன் பாபு கூறுகையில்,
இது டவுனி மைல்டியூ மற்றும் லேட் பிளைட் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் நோய்களிலிருந்து அதிக மதிப்புள்ள தோட்டக்கலை பயிர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ராக் குரூப் 49-ன் கீழ் உள்ள புதிய மூலக்கூறு மூலம் இயங்கும் ஸிவானா ஸ்மார்ட், திராட்சை, கியூகர்பிட்ஸ் வகை பயிர்கள், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகியவற்றில் சிறந்த நோய்க் கட்டுப்பாட்டை வழங்குகிறது.
மேலும் இது விவசாயிகள் பயிர் தரத்தைப் பாதுகாக்கவும், உற்பத்தியை உயர்த்தவும், லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. டவுனி மைல்டியூ மற்றும் லேட் பிளைட் ஆகியவை தோட்டக்கலை பயிர்களைப் பாதிக்கும் மிகவும் அழிவுகரமான நோய்களில் அடங்கும், இவை பெரும்பாலும் விவசாயிகளின் பயிர் பாதுகாப்புச் செலவில் பாதியளவுக்குக் காரணமாகின்றன. மாறும் வானிலை முறைகள் மற்றும் நீண்டகால ஈரப்பதம் காரணமாக நோய் தாக்கம் தீவிரமடைவதால், நிலையான விவசாய முறைகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், நம்பகமான, நீண்டகால பாதுகாப்பை வழங்கும் புதுமையான தீர்வுகள் விவசாயிகளுக்குத் தேவைப்படுகின்றன.
ஸிவானா ஸ்மார்ட் இந்த சவாலை ஒரு நவீன மோட் ஆஃப் ஆக்சன் மூலம் எதிர்கொள்கிறது, இது ஊமைசீட்ஸ் நோய்களுக்கு எதிராக மிகச்சிறந்த பெர்ஃபார்மன்ஸை வழங்குகிறது. ஸிவானா ஸ்மார்ட், மழைக்கால சூழ்நிலையிலும் சராசரியாக 7 முதல் 14 நாட்கள் வரை பாதுகாப்பை வழங்குகிறது.
இதன் மழை-எதிர்ப்பு தன்மையும், ஏற்கனவே வளர்ந்த இலைகளையும் புதிய வளர்ச்சியையும் பாதுகாக்கும் திறனும், முழு பயிர் காலத்திலும் நோய் அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகின்றன. உதவுகிறது” என்று கூறினார்.ஸிவானா ஸ்மார்ட் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட முக்கிய தோட்டக்கலை வளரும் மண்டலங்கள் முழுவதும் கிடைக்கும்.