• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மத நல்லிணக்க கலந்துரையாடல்:நல்லாயன் குருகுல மாணவர்கள் பங்கேற்பு

July 19, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூர் கரும்புக்கடையில் உள்ள மஸ்ஜித் இஹ்ஸான் பள்ளிவாசலில் இன்று மத நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நல்லாயன் குருகுல கல்வி நிறுவனத்தின் 13-ஆம் ஆண்டு மாணவர்கள், தங்களது பாதிரியார் பணிக்கு முந்தைய களப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாவட்டத் தலைவர் பி.எஸ்.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மாவட்டச் செயலாளர் அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
நிகழ்வில் மஸ்ஜித் இஹ்ஸான் தலைமை இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் இந்தாதி அவர்கள்,இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்,மனிதநேயம்,சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விரிவாக உரையாற்றினார்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே பரஸ்பர புரிதலையும்,ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இதில் சாலிடாரிட்டி, SIO நிர்வாகிகள் மற்றும் மஸ்ஜித் இஹ்ஸான் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க