• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவ துறையில் கடந்த 35 ஆண்டு கால பயணத்தில் புதிய மைல்கல்லாக சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் “அபிராமி நெக்ஸ்ட் கேர்” துவக்கம்

July 18, 2026 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையாக தனது மருத்துவ சேவையைத் தொடங்கிய ஸ்ரீ அபிராமி மருத்துவமனை,கடந்த 35 ஆண்டுகளாக தரமான மற்றும் அர்ப்பணிப்புமிக்க மருத்துவ சேவையை வழங்கி, இன்று பல்வேறு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய முன்னணி பல்துறை மருத்துவமனையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்நிலையில்அபிராமி மருத்துவமனையின் முக்கிய மைல்கல்லாக,மருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பாக “அபிராமி நெக்ஸ்ட் கேர்” எனும் புதிய மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா, ஸ்ரீ அபிராமி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய மருத்துவ சேவைகளை உள்ளடக்கிய அபிராமி நெக்ஸ்ட் கேர்” மருத்துவ உள்கட்டமைப்பை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில்,ஸ்ரீ அபிராமி மருத்துவமனை இயக்குனர்கள் மருத்துவர்கள் குந்தவைதேவி பெரியசாமி, செந்தில்குமார்,பாலமுருகன்,உமாதேவி,சுசாரிதா ஆகியோர் கலந்து கொண்டனர்..

முன்னதாக செய்தியாளர்களிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பெரியசாமி மற்றும் இயக்குனர்கள் டாக்டர் செந்தில் குமார்,டாக்டர் பாலமுருகன் ஆகியோர் பேசுகையில்,

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அபிராமி மருத்துவமனை நோயாளிகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு அவர்களை அக்கறையோடு கவனிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி நன்மதிப்பை பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது நவீன தொழில் நுட்ப மருத்துவ வசதிகளை இணைத்து,மருத்துவமனையில் புதிதாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவைகள், ஏ.ஐ.(AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, மேம்படுத்தப்பட்ட இதய சிகிச்சை மையம், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, பேச்சு மற்றும் தொழில்வழி சிகிச்சை மையம், IVF மையம் உள்ளிட்ட பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், கல்வியாளர்,அரசு அதிகாரிகள், தொழில்துறை பிரமுகர்கள்,பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

மேலும் படிக்க