July 18, 2026
தண்டோரா குழு
தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG) 2026 தேர்வில், கோயம்புத்தூர் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) வகுப்பறைப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 170 மாணவர்கள் சிறப்பான அகில இந்திய தரவரிசைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றி,மாணவர்களின் கடின உழைப்பு, ஒழுக்கமான பயிற்சி மற்றும் ஆகாஷ் வழங்கிய தரமான கல்வி வழிகாட்டுதலின் பலனாக அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.மாணவர்களில் நிதின் தினகர்பாபு அகில இந்திய அளவில் 522-வது இடம் (AIR 522) பெற்றுள்ளார். மேலும் முத்துராகவ் (AIR 3347), ஹர்ஷிதா வெங்கடேஷ் (AIR 14627),எம்.பூமிகா (AIR 16354), பிரித்திகா வாசினி வி (AIR 17594) உள்ளிட்ட பலரும் குறிப்பிடத்தக்க தரவரிசைகளைப் பெற்று கோவை மையத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நாடு முழுவதும் AESL மாணவர்களில் 4 பேர் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50 இடங்களிலும், 41 பேர் முதல் 100 இடங்களிலும் இடம்பெற்றிருப்பது, மருத்துவ நுழைவுத் தேர்வுப் பயிற்சியில் ஆகாஷின் முன்னணி நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சாதனை குறித்து மாணவர்கள் கூறுகையில், “நீட் தேர்வில் சிறந்த தரவரிசை பெறுவது எங்களின் நீண்டநாள் கனவாக இருந்தது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல், மாதிரித் தேர்வுகள், செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் சந்தேக நிவர்த்தி வகுப்புகள் ஆகியவை எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவாக இந்த வெற்றி மேலும் ஊக்கமளிக்கிறது,” என்றனர்.
AESL துணை மண்டல இயக்குநர் டி.சிவா பிரசாத் கூறுகையில்,
“மாணவர்களின் இந்தச் சாதனை எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அவர்களின் விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் கற்றலுக்கான அர்ப்பணிப்பு இந்த வெற்றிக்கு காரணமாகும். மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் மருத்துவத் துறையில் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறோம்,” என்றார்.
அனுபவமிக்க ஆசிரியர்கள், அறிவியல் அடிப்படையிலான பாடத்திட்டம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு, வழக்கமான மதிப்பீடுகள் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்த கற்றல் முறையின் மூலம், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட AESL வழிகாட்டி வருகிறது.