• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கரும்புக்கடையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..!

June 28, 2026 தண்டோரா குழு

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை மற்றும் அர்-ரஹ்மான் அகாடமி கட்டணமில்லா கல்வியகம் இணைந்து நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி இன்று (ஜூன் 27, 2026) கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்றது.

​இப்பாரிய விழிப்புணர்வு பேரணியை கரும்புக்கடை (D6) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சந்துரு அவர்களும், கோவை மாநகராட்சியின் 86-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் அவர்களும் கொடியசைத்து முறைப்படி துவங்கி வைத்தனர்.

​நிகழ்வில் அர்-ரஹ்மான் அகாடமி நிர்வாகிகள் நிர்வாகிகள் அப்துல் ஹக்கீம், ஜுனைது உசேன், உமர் பாரூக், சிராஜ்தீன், அப்துல் சத்தார், ஜுபைர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் முன்னிலை வகித்து பேரணியை வழிநடத்தினர்.இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் போதைப்பொருட்களின் தீமைகளை விளக்கும் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கரும்புக்கடை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க