• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது

June 25, 2026 தண்டோரா குழு

என்ஏசி ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி, கொங்கு மண்டலத்தில் தனது வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவை ஆர். எஸ். புரத்தில் முதல் விற்பனை நிலையத்தை இன்று துவக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மூன்றாவது சில்லறை விற்பனை நிலையமாகும்.புதிய கிளையை நடிகை சஞ்சனா ஏ.கே.திறந்து வைத்தார்.

ஆர்.எஸ்.புரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தில், சான்றளிக்கப்பட்ட 92.5 வெள்ளி ஆபரணங்கள், ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட ஆய்வக வைரங்கள் மற்றும் பிஐஎஸ் ஹால்மார்க் பெற்ற 9 காரட் தங்க ஆபரணங்கள் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.நவீன வடிவமைப்பு, வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் சிறப்பான கொள்முதல் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டைலோரி மற்றும் நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் என்ஏசி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது :-

“தரம், கைவினைத்திறன் மற்றும் மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய சந்தையாக கோவை இருந்து வருகிறது. ஆர்.எஸ்.புரம் வழியாக கொங்கு மண்டலத்தில் நுழைவது ஸ்டைலோரியின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகும்.சான்றளிக்கப்பட்ட வெள்ளி, ஆய்வக வைரங்கள் மற்றும் 9 காரட் தங்க ஆபரணங்களை ஒரே இடத்தில் வழங்குவதன் மூலம்,வடிவமைப்பு, தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்கும் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்” என்றார்.

என்ஏசி ஜுவெல்லர்ஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அனந்த பத்மநாபன் கூறுகையில்,

“1917-ஆம் ஆண்டு முதல் நம்பிக்கையையும் கைவினைத்திறனையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் என்ஏசி ஜுவெல்லர்ஸின் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக ஸ்டைலோரி உருவாகியுள்ளது. கோவையில் முதல் கிளை தொடங்கப்பட்டிருப்பது தமிழகம் மற்றும் அதற்கு அப்பாலான முக்கிய சந்தைகளில் ஸ்டைலோரியை விரிவுபடுத்தும் நோக்கில் முக்கிய முன்னேற்றமாகும்” என்றார்.

பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுடன் தொடங்கிய திறப்பு விழாவில் வாடிக்கையாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஸ்டைலோரி, என்ஏசி ஜுவெல்லர்ஸ் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை சஞ்சனா ஏ.கே.,

“வெள்ளி, ஆய்வக வைரம், தங்க ஆபரணங்கள் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டைலோரி தயாரிப்புகள் உள்ளன. வடிவமைப்பும், விலை நிர்ணயமும் இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன” என்றார்.

சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, கோவை ஹோம் அமைப்பின் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் 15 மாணவர்களின் பள்ளிக் கட்டணத்திற்காக ரூ.5 லட்சம் நிதியுதவியை ஸ்டைலோரி அறிவித்தது. மேலும், அறிமுகக் கால சலுகையாக ஒவ்வொரு கொள்முதலுக்கும் இலவச தங்க நாணயம் வழங்கப்படுவதுடன், கடைக்கு வருகை தரும் அனைவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆபரணங்களை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க