• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து தலைமுறை நேயர்களுக்கும் பிடித்தமான தமிழ் நிகழ்ச்சிகளை மீண்டும் வழங்க டாடா பிளே, தமிழ் டிவியை அறிமுகப்படுத்துகிறது

June 24, 2026 தண்டோரா குழு

டாடா பிளே அதன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் போர்ட்ஃபோலியோவை டாடா பிளே ‘தமிழ் டிவி’-ஐ அறிமுகம் செய்வதன் மூலம் விரிவுபடுத்துகிறது – இந்த பிரத்தியேகமான விளம்பரமில்லாத சேவையில் ஸ்டார் விஜய் சேனலிலிருந்து நீங்கள் பெரிதும் விரும்பிய சில நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். 24×7 எப்போதும் கிடைக்கும் இந்த சேனலில் குடும்ப நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் புராண இதிகாசங்கள் என அனைத்து தலைமுறை நேயர்களும் ரசிக்கும் வகையில் பிரத்தியேகமாக தேர்வு செய்து தொகுக்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியின் ஊடுருவல் ஆழமாக உள்ள மாநிலமாகவும், பிராந்திய அளவில் பொதுவான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அதிகம் ரசிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு நாட்டின் மிகவும் உற்சாகமான என்டர்டெயின்மென்ட் மார்கெட்டாக உள்ளது. தரமான தமிழ் கதைகளுக்கான ஆர்வம் பெருமளவிலான நேயர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மக்களுக்கு பிடித்தமான பல கிளாசிக் நிகழ்ச்சிகளை அவர்களால் எளிதாக அணுக முடிவதில்லை. டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’ இந்த சவாலுக்கு நேரடித் தீர்வினை வழங்குகிறது; பல்வேறு காலகட்டத்தில் வெளியாக மக்களின் மனம் கவர்ந்த எண்ணற்ற பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுத்து விரிவான பட்டியலாக எளிதாக அணுகும் வகையில், விளம்பரமில்லாமல் தடையின்றி வழங்குவதன் மூலம் இந்தத் தேவையை டாடா பிளே நிரப்புகிறது.

இதுகுறித்து டாடா பிளே நிறுவனத்தின் தலைமை கமர்ஷியல் மற்றும் கான்டென்ட் அலுவலர் பல்லவி பூரி அவர்கள் கூறுகையில்,

“இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் மறக்கமுடியாத நிறைய கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தமிழ் தொலைக்காட்சி உலகம் நேயர்களுக்கு வழங்கியுள்ளது. இதுவரை அத்தகைய மனதிற்கு பிடித்த நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ஒரே இடத்தில் மீண்டும் பார்ப்பதற்கு சொற்பமான வழிகளே இருந்தன. டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’ மூலம், குடும்பங்கள் ஒன்றாக கண்டு மகிழ்ந்த தருணங்களை மீண்டும் உருவாக்கவுள்ளோம்; அதேநேரத்தில், பிரபலமான நிகழ்ச்சிகளை மீண்டும் ரசிப்பதற்கு ஒரு விளம்பரமில்லாத தளத்தையும் நாங்கள் நேயர்களுக்கு வழங்குகிறோம்.

எங்கள் சந்தாதாரர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மாறுபட்ட பொழுதுபோக்கு அனுபவங்களை தேர்வு செய்து வழங்குவதில் நாங்கள் தொடர் கவனம் செலுத்துவதை இந்த புதிய சேவை பிரதிபலிக்கிறது,” என்றார்.

இந்த சேவையில் கற்பனை படைப்புகள் (ஃபிக்ஷன்), நிஜப் படைப்புகள் (நான்-ஃபிக்ஷன்) மற்றும் புராணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, ஈரமன ரோஜாவே, சின்னத்தம்பி மற்றும் மௌனராகம் உள்ளிட்ட பிரபலமான குடும்ப நாடகங்களை நேயர்கள் மீண்டும் காணலாம். கலக்க போவது யாரு சீசன் 5 & 6 ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியை புதிதாக கொண்டுவந்து பொழுதுபோக்கு பிரிவிற்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.

புராண தொடர்களைப் பொருத்தவரை இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி இதிகாசங்களில் மகாபாரதம் நிச்சயமாக இடம்பெறும்; இதன் அசல் பதிப்பு இந்தி GEC-யில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது தமிழிலும் கொண்டுவரப்பட்டுள்ளது; காலத்தால் அழியாத இந்த காவியத்தையும், அதன் கலாச்சார உணர்வையும் நேயர்களுக்கு அவர்களின் விருப்பமான மொழியில் டாடா பிளே இப்போது வழங்குகிறது.

“டாடா பிளே உடன் இனைந்து நமக்கு மிகவும் பிரியமான மற்றும் புகழ்பெற்ற சில தமிழ் நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.  காலத்தால் அழியாத இந்த நிகழ்ச்சிகள் தலைமுறை தலைமுறையாக மக்களிடம் ஒரு ஆழமான உணர்வின் பிணைப்பை உருவாக்கியுள்ளன; மேலும் அவற்றை மீண்டும் ஒளிபரப்புவதன் மூலம், நேயர்களுக்கு இந்த கிளாசிக் படைப்புகளை புதிய தலைமுறைக்கு நம்மால் அறிமுகம் செய்ய முடிகிறது; அதன் மூலம் பிரியமான நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் வழங்குகிறோம். இந்த சேவையானது சிறந்த கதைகளை குடும்பத்தினர் மீண்டும் ஒன்றாக காணும் ஒரு ஒருங்கிணைந்த அனுபவத்தைப் பெற வாய்ப்பளிக்கிறது,” என்று ஜியோஸ்டார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குடும்பமாக காண்பதற்காக வடிவமைக்கப்பட்ட டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’, பல்வேறு இரசனைகள் மற்றும் பல வயதுப் பிரிவினரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் பல வகையான நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து வழங்குகிறது; இதன் மூலம் முழு குடும்பத்தினரும் பகிரும் வகையில் ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

டாடா பிளேவில் ‘தமிழ் டிவி’ 23 ஜூன் 2026 முதல் சர்வீஸ் எண் #1509-இல் ஒரு நாளைக்கு 2 ரூபாய் என்கிற கட்டணத்தில் கிடைக்கும்.

மேலும் படிக்க