• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் விஜய் பிறந்தநாள்: கோவையில் அன்னதானம், அரிசி மற்றும் மருத்துவ நிதியுதவி வழங்கிய உமா மகேஷ்வரி

June 22, 2026 தண்டோரா குழு

தமிழ்நாட்டின் முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் தன்னார்வலரும் இளம் பெண் தொழிலதிபருமான உமா மகேஷ்வரி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கோவை கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு அன்னதானமாக அசைவ விருந்து வழங்கப்பட்டதுடன், குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகளும் வழங்கப்பட்டன.மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் முதியோர்களுக்கு மருத்துவ நிதியுதவியும் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தொண்டர்களும்,சமூக ஆர்வலர்களும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய உமா மகேஷ்வரி,

“விஜய் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறேன்.இந்த ஆண்டு அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் இது எனக்கு மிகவும் சிறப்பானதாகும்.மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அன்னதானம், உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ நிதியுதவி வழங்கியது பெரும் மனநிறைவை அளிக்கிறது” என்றார்.

மேலும், “பசியில்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முதல்வர் விஜய் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். அதனை ஆதரிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் வழங்குவதிலும், உதவி தேவைப்படுபவர்களுக்கு துணை நிற்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்” என்றும் தெரிவித்தார்.நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பொதுமக்கள், முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உமா மகேஷ்வரிக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

மேலும் படிக்க