• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

June 19, 2026 தண்டோரா குழு

கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர்.

இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21, 2026 வரை கோவை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள வெல்கம் ஹோட்டல் பை ஐடிசியில் நடைபெறுகிறது. தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, பார்வையாளர்களை நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன் ஸ்டடெட் கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்பு அமைகிறது.

கண்காட்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வைர மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், உங்கள் பழைய தங்கத்தை எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டிருந்தாலும் 9 காரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளுக்கு 0 சதவீத கழிவு சலுகையுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.)

இந்த கண்காட்சி, நகை ஆர்வலர்கள், தனிஷ்கின் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஒரே மேடையில் இணைத்து, இயற்கை வைரங்களின் அருமை மற்றும் புதுமையான வடிவமைப்புகளின் சிறப்பை கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நகைப் பிரிவு பிராந்திய கிளஸ்டர் மேலாளர் சந்தோஷ், தனிஷ்க் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில் ,

“இந்த பிரத்யேக கண்காட்சியின் மூலம் கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களின் சிறந்த இயற்கை வைர நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நேர்த்தியான கைவினைத் திறன், புதுமையான வடிவமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும் நகைகளை வழங்குவதே எங்களின் நோக்கம். கோயம்புத்தூர் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். இங்கு வாடிக்கையாளர்கள் அளித்து வரும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இயற்கை வைரங்களின் அழகையும், ஒவ்வொரு நகையின் பின்னணியில் உள்ள தனித்துவமான கதைகளையும் அவர்கள் பெரிதும் பாராட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தரம், நம்பிக்கை மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் தனிஷ்க் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது,” என்றனர்.

மேலும் படிக்க