June 14, 2026
தண்டோரா குழு
முதியோர் பராமரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான Geri Care, கோவையில் முதியோருக்கான பிரத்யேக சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பு மருத்துவமனையை இன்று தொடங்கியது.
லட்சுமி மில்ஸ் சந்திப்பில், லுலு மாலுக்கு எதிரே அமைந்துள்ள இந்த 100 படுக்கைகள் கொண்ட மையம்,கோவையின் முதல் முதியோர் நல மருத்துவர் (Geriatrician) தலைமையிலான திறன் வாய்ந்த பராமரிப்பு மையம் (Skilled Nursing Facility) மற்றும் நீண்டகால சிகிச்சை மருத்துவமனையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மையத்தை டாக்டர் ராஜா சபாபதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜி.சவுந்தரராஜன், வி. லட்சுமிநாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.ஜெரி கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மருத்துவமனையில் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு சேவைகள், மறுவாழ்வு சிகிச்சை, துணை வாழ்வு வசதிகள், நினைவாற்றல் குறைபாடு (Dementia) பராமரிப்பு, வலி தணிப்பு மற்றும் ஆறுதல் பராமரிப்பு, தற்காலிக நிவாரண பராமரிப்பு (Respite Care), பகல்நேர பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும், ECG, Echo, Ultrasound, ஆய்வகம், மருந்தகம், தடுப்பூசி சேவைகள், பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு வசதிகளுடன் கூடிய பல்துறை முதியோர் மருத்துவ வெளிநோயாளர் பிரிவும் இந்த மையத்தில் செயல்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் லட்சுமிபதி ரமேஷ்,
“இந்தியாவில் முதியோர் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள பராமரிப்பு இடைவெளியை நிரப்பும் நோக்கில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. முதியோர் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் முழுமையான தொடர்ச்சியான பராமரிப்பை வழங்குவதே எங்கள் இலக்கு,” என்றார்.
டாக்டர் ராஜா சபாபதி பேசுகையில்,
“மருத்துவத் துல்லியத்துடன் மறுவாழ்வு மற்றும் நீண்டகால பராமரிப்பை இணைக்கும் இத்தகைய மையங்கள் காலத்தின் அவசியமாக மாறியுள்ளன. கோவைக்கு இது மிகவும் தேவையான ஒரு வசதியாகும்,” என்று குறிப்பிட்டார்.
ஜி. சவுந்தரராஜன், “முதியோர்களுக்கான பிரத்யேக பராமரிப்பு சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கும் இந்த முயற்சி கோவையின் சமூகப் பொறுப்புணர்வை பிரதிபலிக்கிறது,” என்றார்.
வி. லட்சுமிநாராயணசாமி, “எங்கள் பெற்றோர்களும் மூத்த குடிமக்களும் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் முதுமையை எதிர்கொள்ளத் தகுதியானவர்கள். அந்த தேவையை தொழில்முறை நிபுணத்துவத்துடன் பூர்த்தி செய்யும் புதிய முயற்சியாக ஜெரி கேர் திகழ்கிறது,” என்றார்.
ஓய்வூதிய வாழ்க்கைக்கான முக்கிய நகரமாக உருவெடுத்து வரும் கோவையில், முதியோர் பராமரிப்புக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய மையம் அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய மருத்துவ கட்டமைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.