• Download mobile app
14 Jun 2026, SundayEdition - 3777
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தவெக சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் – ரத்ததானம் செய்து தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

June 14, 2026 தண்டோரா குழு

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ரத்ததானம் செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிதின்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, துடியலூர் பகுதி செயலாளர் சபரிமனோ, மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித், தெற்கு ஒன்றிய செயலாளர் கணுவாய் ரஞ்சித்குமார், எஸ்.எஸ்.குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, சித்ரா பகுதி செயலாளர் பூபதி, கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் ஹேமலதா, துடியலூர் பகுதி செயற்குழு உறுப்பினர் சோபியா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மோகன்ராஜ், ராஜேந்திரன், கோவிந்தராஜ், மோகன், ராஜகோபால் உள்ளிட்டோரும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.இந்த ரத்ததான முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் தன்னார்வமாக ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாம், சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதோடு, அவசர சிகிச்சை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான ரத்த இருப்பை அதிகரிக்கும் முயற்சியாக அமைந்தது.

மேலும் படிக்க