June 13, 2026
தண்டோரா குழு
கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான Haribhavanam Restaurants India Private Limited, உணவகத் துறையில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தை தொடர்ந்து, தற்போது சில்லறை வணிகத் துறையில் தனது தடத்தை பதிக்கும் வகையில் ‘குரோசர் சென்ட்ரல்’ (Grocer Central) என்ற நவீன சூப்பர் மார்க்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவையின் புதிய அடையாளமாக உருவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சூப்பர் மார்க்கெட், சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில், ஒரு ஏக்கர் வளாகத்தில், இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக 70-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலச்சந்தர் ராஜு கூறுகையில்,
“50 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகத் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். எங்கள் உணவகங்களில் பயன்படுத்தப்படும் தரமான மூலப்பொருட்களைப் போலவே, இப்போது வீட்டு உபயோக மற்றும் மளிகைப் பொருட்களையும் நேரடியாக மக்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் குரோசர் சென்ட்ரலை தொடங்கியுள்ளோம்” என்றார்.
அரிசி,பருப்பு, மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய்கள், மசாலா பொருட்கள், பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் பொருட்கள், பேக்கரி தயாரிப்புகள், ஸ்நாக்ஸ், இனிப்புகள், குளிர்பானங்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட 50,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் ‘மீட் சென்ட்ரல்’ என்ற பிரத்யேக இறைச்சி பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மட்டன், சிக்கன், மீன், நண்டு, பிரான், நாட்டுக்கோழி, காடை, முயல் உள்ளிட்ட பல்வேறு இறைச்சி வகைகள் சுகாதாரமான முறையில் தினசரி புது நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட் ஷாப், ஐஸ்கிரீம் பார்லர், பூக்கடை, ஆட்டோமேட்டிக் கார் வாஷ் வசதி, லாண்டரி சேவை, டிஜிட்டல் கட்டண வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் உதவி மையம் உள்ளிட்ட சேவைகளும் ஒரே வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
குரோசர் சென்ட்ரல் ஜூன் 14, 2026 அன்று காலை 7.34 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. தொடக்க நாளைத் தொடர்ந்து அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.
கோவை முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதி வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலமாகவும், ‘Grocer Central’ மொபைல் செயலி மூலமாகவும் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
தரம், நம்பகத்தன்மை, நவீன வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த ஷாப்பிங் அனுபவத்தை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள குரோசர் சென்ட்ரல், கோவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் புதிய ஷாப்பிங் இலக்காக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.