• Download mobile app
09 Jun 2026, TuesdayEdition - 3772
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ‘சத்குரு – மாறும் யுகத்தின் முகம்’ நூல் வெளியீட்டு விழா கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்றது

June 9, 2026 தண்டோரா குழு

பிரபல தமிழ் எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான ‘மரபின் மைந்தன்’ முத்தையாவின் 80-வது நூலான ‘சத்குரு – மாறும் யுகத்தின் முகம் (100 வெண்பா மலர்கள்)’ நூல் வெளியீட்டு விழா, கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில் இன்று கோவையில் (07/06/2026) நடைபெற்றது.

‘நமது நம்பிக்கை’ சார்பில்,கோவை ராம் நகரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கினார்.பூர்ணிமா ஏஜென்சீஸ் நிறுவனத்தின் கே.ராமலிங்கம் நூலை வெளியிட,நெல்லை பெரியலாலா கார்னர் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அ.மாரியப்பன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சத்குருவின் ஆன்மிகப் பங்களிப்புகள், வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் ஆளுமைத் திறன்களைப் போற்றும் வகையில் 100 வெண்பாக்களை இந்த நூலில்
முத்தையா எழுதியுள்ளார்.தற்காலத்தில் அரிதாகப் பயன்படுத்தப்படும் வெண்பா இலக்கிய வடிவில் முழுமையாக அமைந்துள்ள இந்த நூலில், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு வெண்பாவிற்கும் விளக்கவுரையும் தரப்பட்டுள்ளது.

இவ்விழாவில் முனைவர் ஞானாம்பிகா மற்றும் கனகதூரிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.‘நகைச்சுவை இமயம்’ ஈ.ரெ. சண்முகவடிவேல் சிறப்புரையாற்றினார். இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான வடிவங்களுள் ஒன்றான வெண்பா, கடுமையான இலக்கண விதிகளைக் கொண்டது. இன்றைய காலத்தில் வெண்பா வடிவில் நூல்கள் வெளிவருவது அரிதாக உள்ள நிலையில், சத்குருவைப் போற்றும் 100 வெண்பாக்களுடன் விளக்கவுரையையும் இணைத்து நூல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க