May 20, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வி, சர்வதேச அளவில் பயணம் செய்யும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் இல்லாத செளகரியம் மற்றும் கூடுதல் வசதி,தங்களது தேவைகளுக்கேற்ற வகையில் தேர்ந்தெடுக்கும் சேவைகள் மற்றும் சிறந்த மதிப்பை வழங்கும் நோக்கில், தங்களது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காகப் புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பல புதிய சேவைகளும், பேக்குகளும் அறிமுகமாகியுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 7 நாட்கள், 14 நாட்கள் மற்றும் 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேக்குகள், ’வி’ நிறுவனத்தின் தற்போதைய சர்வதேச ரோமிங் சேவை வரம்பை மேலும் வலுப்படுத்துகின்றன. வணிகம், மருத்துவ சுற்றுலா, கல்வி மற்றும் பொழுதுபோக்கு எனப் பல்வேறு காரணங்களுக்காக சர்வதேசப் பயணங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,வாடிக்கையாளர்கள் தங்களின் பயணத் திட்டங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தக்கூடிய சர்வதேச அழைப்புகளுக்கான ரோமிங் ஆப்ஷன்களையே பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தத் தேவையைப் புரிந்துகொண்டு, ’வி’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும்போதும் தடையின்றி தொடர்பில் இருப்பதற்கான கூடுதல் நெகிழ்வுத்தன்மை, விருப்பத்தேர்வுகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை இடையூறுகள் இல்லாமல் பயன்படுத்தும் வாய்ப்புகளை வழங்குகிறது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்வதேச ரோமிங் பேக்குகள், நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெவ்வேறு கால அளவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெருநிறுவன சந்திப்புகள், உலகளாவிய மாநாடுகள், குடும்பத்தினர் உடனான சந்திப்புகள் அல்லது நீண்ட கால வெளிநாட்டுப் பயணங்கள் என எதுவாக இருந்தாலும், ’வி’ வாடிக்கையாளர்கள் இப்போது தங்களின் பயண அட்டவணைக்கு ஏற்ற ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இந்த புதிய சர்வேதேச ரோமிங் பேக்குகளை கூடுதலாக அறிமுகப்படுத்தி இருப்பதன் மூலம், ’வி’ நிறுவனத்தின் ஒட்டுமொத்த சர்வதேச ரோமிங் போர்ட்ஃபோலியோ இப்போது 17 வெவ்வேறு விதமான பேக்குகளைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் அனைத்து வேலிடிட்டி பிரிவுகளிலும் உண்மையான அன்லிமிட்டெட் டேட்டா வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் சர்வதேசப் பயணங்களின் போது தங்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோர் உடனும் எவ்விதத் தடைகளும் இல்லாமல் தொடர்பில் இருக்க முடியும். இந்த புதிய சர்வதேச பேக்குகளின் அறிமுகம் குறித்து ’வி’ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரி அவநீஷ் கோஸ்லா கூறுகையில், “சர்வதேசப் பயணத் தேவைகள் நாளுக்கு நாள் பலதரப்பட்டதாகவும், மாறிக்கொண்டே இருப்பதாகவும் உள்ளன.
’வி’ நிறுவனத்தின் நெகிழ்வான ரோமிங் திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பயணக் காலம் மற்றும் பயன்பாட்டுத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கி, உலகளாவிய இணைப்பை எளிதாக்கியுள்ளோம்.இது ஒரு குறுகிய கால அலுவல் பயணமாக இருந்தாலும், அவசியமான குடும்பச் சந்திப்பாக இருந்தாலும், அல்லது நீண்ட கால வெளிநாட்டுப் பயணமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கூடுதல் செளகரிமளிக்கும் நெகிழ்வுத்தன்மையுடனும் மன அமைதியுடனும் தடையின்றி தொடர்பில் இருக்க முடியும்,” என்றார்.