• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக பாலிசிதாரர்களுக்கு 2026 நிதி ஆண்டிற்கு ரூ.2,173 கோடி போனஸ்: டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் அறிவிப்பு

May 18, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ், மார்ச் 31, 2026 உடன் முடிவடையும் நிதியாண்டில், லாபத்தில் பங்குபெறும் தங்களது பாலிசிதாரர்களுக்கு ரூ.2,173 கோடி போனஸ் தொகையை அறிவித்துள்ளது.

இது நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போனஸ் ஆகும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.1,842 கோடியை விட இது 18 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம் 8.74 லட்சத்திற்கும் அதிகமான பாலிசிதாரர்கள் பலன் பெறுவார்கள். வாடிக்கையாளர்களின் நீண்டகால நிதி இலக்குகளை அடைய உதவுவதோடு, அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் டாடா ஏஐஏ நிறுவனத்தின் உறுதியான செயல்பாட்டை இது மீண்டும் நிரூபித்து உள்ளது.டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் வேல்யூ இன்கம் பிளான், சுப் ப்ளெக்ஸி இன்கம் பிளான், சுப் மஹா லைப், டயமண்ட் சேவிங்ஸ் பிளான் மற்றும் வேல்யூ இன்கம் பிளான் போன்ற முக்கிய காப்பீட்டு திட்டங்களுக்கு இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

“பார்” திட்டங்கள் என பொதுவாக அழைக்கப்படும் காப்பீட்டுத் திட்டங்கள், நிறுவனத்தின் லாபத்தை பாலிசிதாரர்களுடன் போனஸ் வடிவில் பகிர்ந்து கொள்ளும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் ஆகும்.இந்த போனஸ் தொகை உத்தரவாதமானது இல்லை என்றாலும், காப்பீட்டு நிறுவனத்தின் நிதியின் செயல்பாட்டைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் இது அறிவிக்கப்படும். பாலிசிதாரர்களின் நீண்ட கால நிதி முதலீட்டிற்கு கிடைத்த ஒரு சிறந்த வெகுமதியாக இந்த போனஸ் அறிவிப்பு அமைந்துள்ளது.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்பு, ஓய்வூதியத் திட்டமிடல், தொடர்ச்சியான வருமானத்தை உருவாக்குதல் அல்லது குடும்பத்திற்கான நிதிப் பாதுகாப்பை உருவாக்குதல் என எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டங்கள் ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்போடு சேர்த்து சிறந்த சேமிப்பையும் ஒருங்கிணைத்து வழங்குகின்றன.இந்த மாபெரும் போனஸ் அறிவிப்பானது, டாடா ஏஐஏ நிறுவனத்தின் நிதி வலிமை மற்றும் முறையான நிதி நிர்வாகத்திற்கு ஒரு சான்றாகும். மார்ச் 31, 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஆண்டை விட 18 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,45,617 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியான மற்றும் பொறுப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பாலிசிதாரர்கள் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள்.

இந்த அறிவிப்பு குறித்து டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஷிதிஜ் சர்மா கூறுகையில்,

“எங்கள் பாலிசிதாரர்களுக்கு மீண்டும் ஒரு முறை சாதனை அளவிலான போனஸ் தொகையை அறிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த பிரம்மாண்டமான போனஸ் அறிவிப்பானது, டாடா ஏஐஏ-வின் முறையான முதலீட்டு உத்தி, சிறந்த நிதி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால மதிப்பை வழங்குவதில் உள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை காட்டுகிறது.

பாலிசிதாரர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். அவர்களின் நீண்டகால நிதி இலக்குகளுக்கு ஏற்ப பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நீடித்த செல்வத்தை உருவாக்கும் திட்டங்கள் மூலம் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறோம்,” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க