May 18, 2026
தண்டோரா குழு
உலக அளவில் தயாரிப்புப் பொறியியல் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டாடா டெக்னாலஜிஸ், தானியங்கி வாகனங்களுக்கான முழுமையான தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு ‘பிராஸ்ட் & சல்லிவன் 2026 ஆசியா-பசிபிக் விருதை’ வென்றுள்ளது.
தானியங்கி மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் தொழில்நுட்பங்களில் பாதுகாப்பான மற்றும் உற்பத்திக்கேற்ற சிறப்பான சேவைகளை வழங்கும் டாடா டெக்னாலஜிஸ் திறமையை இந்த அங்கீகாரம் காட்டுகிறது.இந்த விருது, ஒரு வாகனத்தை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்டத் திட்டமிடல், வடிவமைப்பு, சோதனை, உற்பத்தி மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை என அனைத்திலும் டாடா டெக்னாலஜிஸ் வழங்கும் முழுமையான மற்றும் சிறந்த பொறியியல் முறையைப் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் சாப்ட்வேர் மற்றும் தானியங்கி வாகனங்களை நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில், மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல் மற்றும் சாப்ட்வேர் பொறியியல் ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்து, உலகளாவிய அளவில் சிறப்பான முழுமையான பொறியியல் சேவைகளை வழங்கி டாடா டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த விருது குறித்து டாடா டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வாரன் ஹாரிஸ் கூறுகையில்:
“பிராஸ்ட் & சல்லிவன் விருது, தானியங்கி மற்றும் ஏடிஏஎஸ் தொழில்நுட்பங்களில் எங்கள் முழுமையான பொறியியல் அணுகுமுறை மற்றும் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. சாப்ட்வேர் மூலம் இயங்கும் வாகனத் துறையில், நிறுவனங்களுக்குத் தேவையான சிறந்த தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
இது குறித்து பிராஸ்ட் & சல்லிவன் கூறுகையில்,
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் சிறந்த எதிர்கால நோக்குடைய கண்டுபிடிப்புகள், வாடிக்கையாளர்கள் மீதான அக்கறை மற்றும் நிலையான செயல்பாடு ஆகியவற்றை நிரூபித்துள்ளது. இதற்கு அவர்களின் சிறந்த முதலீடுகளும் கூட்டணிகளும் உதவியுள்ளன. ஜெர்மனியைச் சேர்ந்த இஎஸ் – டெக் குரூப் நிறுவனத்தை வாங்கியது மற்றும் பல்வேறு கூட்டணிகள் ஆகியவை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை ஒரு நம்பகமான நீண்டகாலப் பொறியியல் கூட்டு நிறுவனமாக மேலும் பலப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து டாடா டெக்னாலஜிஸ் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீராம் லக்ஷ்மிநாராயணன் கூறுகையில்:
“தானியங்கி வாகனத் திறனை உருவாக்குவது என்பது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, பல அமைப்புகளை ஒன்றாக இணைப்பதும் அதைச் சரியாகச் சோதிப்பதும் ஆகும். எங்களின் சிறப்பான பொறியியல் கட்டமைப்புகள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் ஆரம்பக்கட்ட வடிவமைப்பிலிருந்து உற்பத்தியை நோக்கி நம்பிக்கையுடன் செயல்பட உதவுகின்றன” என்று தெரிவித்தார்.