• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீன் மிளகு மசாலா

October 13, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

வறுக்கக் கூடிய மீன் – அரை கிலோ.

வெங்காயம் – 2௦௦ கிராம் (நறுக்கியது).

பச்சை மிளகாய் – நான்கு (கீறியது).

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.

சீரகம் – ஒரு டீஸ்பூன்.

மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்.

காய்ந்த மிளகாய் – ஐந்து.

கொத்தமல்லி இலை – ஒரு கப்.

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

எண்ணெய் – தேவைகேற்ப.

கரிவேபில்லை – சிறிதளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கரிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும்.நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும்.

மேலும் படிக்க