• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தூத்துக்குடி அணி சாம்பியன்

May 2, 2026 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற “சுகுணா டிராபி-2026” மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார்ப்பரேஷன் ஹாக்கி மைதானத்தில் தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆண்களுக்கான “சுகுணா டிராபி-2026” ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை கோவை ஆர்.எஸ்.புரம் ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானம் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 35 அணிகளில் இருந்து சுமார் 700 இளம் வீரர்கள் பங்கேற்றனர். ஹாக்கி இந்தியா அங்கீகாரத்துடன் நடைபெற்ற இந்த தொடர், இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு முன்னேற்றும் முக்கிய தளமாக அமைந்தது.

இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி அணி, கோயமுத்தூர் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ராம்நாடு அணி, மதுரை அணியை 7-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.

மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தூத்துக்குடி மற்றும் ராம்நாடு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளரும் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவருமான சேகர் மனோகரன்,கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

ஜூன் மாத இறுதியில் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.இதில் இன்று வெற்றி பெற்ற அணியினர் தமிழ்நாடு சார்பாக பங்கேற்பார்கள் என்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 36 மாநிலங்கள் கலந்து கொள்கின்றது அதில் A-வரிசையில் தமிழ்நாடு அணி களம் இறங்குகிறது.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக் கடுமையாக இருக்கும் அதற்காக பிரிட்டன் நாட்டில் இருந்து சிறப்பு பயிற்சியாளர் வந்து தமிழகத்தைச் சேர்ந்த அணியினருக்கு பயிற்சி அளிக்க போவதாக தமிழ்நாடு ஹாக்கி யூனிட் பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க