• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஐடி பி.டெக். மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு தொடக்கம்

April 30, 2026 தண்டோரா குழு

2026 கல்வியாண்டிற்கான விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு இன்று (ஏப்ரல் 28) தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் சுமார் 129 நகரங்களில் உள்ள 212 மையங்களில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
துபாய், அபுதாபி, கத்தார், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா உள்ளிட்ட 9 நாடுகளில் விஐடி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் நுழைவுத் தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும்.வேலூர் வளாகத்தில் இன்று நடைபெற்ற நுழைவுத் தேர்வை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குநர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க