• Download mobile app
24 Apr 2026, FridayEdition - 3726
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் “சுகுணா டிராபி–2026” மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி – ஏப் 28ம் தேதி துவக்கம்

April 24, 2026 தண்டோரா குழு

தமிழக ஹாக்கி வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் அளிக்கும் வகையில், மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடைபெற உள்ளது.

அண்மையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.10 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட புதிய கார்ப்பரேஷன் ஹாக்கி மைதானம் துவக்கப்பட்டு, தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சிகளும் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆண்களுக்கான “சுகுணா டிராபி–2026” ஹாக்கி போட்டி வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை ஆர்.எஸ்.புரம் ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானம் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற உள்ளன.

இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்த சுமார் 700 இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.ஹாக்கி இந்தியா அங்கீகாரத்துடன் நடைபெறும் இப்போட்டி, இளம் திறமைகளை கண்டறிந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு முன்னேற்றும் முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி, துணை தலைவர் மெர்வின் ஜெஸ்ஸி மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகள்,ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் என்றும், தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்,ஹாக்கி ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு இளம் வீரர்களை ஊக்குவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது வீரர்களின் – செயல்பாடுகள் மாநிலத் தேர்வுக் குழுவினரால் கூர்ந்து – கவனிக்கப்படும். ஹாக்கி இந்தியாவின் விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்படும். இது உயர்தரமான போட்டியை உறுதி செய்கிறது. இளம் விளையாட்டு வீரர்களுக்குத் தங்கள் – திறமையை வெளிப்படுத்தவும், போட்டி அனுபவத்தைப் பெறவும், தேசிய அளவில் தமிழ்நாடு ஹாக்கியின் வெற்றியைத் தொடரவும் இந்தச் சாம்பியன்ஷிப் ஒரு வாய்ப்பாக அமையும்.

இதன் இறுதிப்போட்டி கோவையில்
மே 2 ந்தேதி மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க