• Download mobile app
12 Sep 2026, SaturdayEdition - 3867
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூரில் குழந்தைகளுக்கான “Flight of Fantasy 5.0” – மறக்க முடியாத விமான அனுபவம்

April 24, 2026 தண்டோரா குழு

சமூக சேவை நோக்கில், ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்காக “Flight of Fantasy 5.0” என்ற சிறப்பு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடைபெற்றது.

“ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சி உரியது” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, குழந்தைகள் கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் கோயம்புத்தூருக்கு திரும்பச் செய்யப்பட்டது.

இந்த முயற்சி, கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் இணைந்து நடத்தப்பட்டது. பல சமூக அமைப்புகள் இணைந்து செயல்படுத்திய இந்த திட்டம், குழந்தைகளுக்கு விமானப் பயணத்தின் மகிழ்ச்சியை நேரடியாக அனுபவிக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் பங்கேற்ற பல குழந்தைகளுக்கு இது முதல் விமான அனுபவமாக இருந்ததால்,அவர்களின் வாழ்க்கையில் நினைவில் நிற்கும் முக்கிய தருணமாக அமைந்தது என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 தலைவர் ராகுல் கிருஷ்ணகோபால்,லேடீஸ் சர்க்கிள் சேர் பெர்சன் நிகிதா ராகுல், மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 100 தலைவர் பிரவேஷ் ஜெயின், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திபேந்தர் சிங், மற்றும் ராஜேஷ் போஹ்ரா, கவுரவ் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க