April 9, 2026
தண்டோரா குழு
டிபிஎஸ் பேங்க் இந்தியா இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும், அதிகம் பயணம் செய்யும் உயர் வகுப்பினருக்காக வடிவமைக்கப்பட்ட புதிய ‘டிபிஎஸ் அஸ்பயர்’ திட்டம் மற்றும் அதன் சிறப்பான அஸ்பயர் டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய அறிமுகம் குறித்து டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் கன்ஸ்யூமர் பேங்கிங் குரூப் பிரிவின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான அம்புஜ் சந்தனா கூறுகையில்,
“வாடிக்கையாளர்களின் மொத்த உறவு மதிப்பு ரூ.10 லட்சம் அல்லது சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச (சராசரி இருப்பு) மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 2 லட்சம் வைத்திருப்பவர்களுக்கு,டிபிஎஸ் அஸ்பயர் பிரீமியம் வங்கிச் சேவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் செல்வம் பெருகும்போது, அவர்களுக்கு ஒரு நீண்டகால வங்கிப் பங்குதாரராக டிபிஎஸ் பேங்க் தனது சேவைகளை வலுப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக ரிலேஷன்ஷிப் மேனேஜர் மற்றும் பல்வேறு இடங்களில் வசிக்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சலுகைகள் போன்ற உயர்தர சேவை-சார்ந்த வங்கிச் சேவைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் இந்த உயர் வகுப்பினர், செல்வத்தைச் சேர்க்கும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதோடு, பெரும்பாலும் அதிக மதிப்பு சார்ந்த வாடிக்கையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான வங்கிச் சேவைகளைத் தாண்டி வளர்ந்துள்ள, முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த இந்த வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டிபிஎஸ் அஸ்பயர் உருவாக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கணக்கு இருப்புத் தொகைக்கு அதிக வருமானம், வங்கிச் சேவைகளுக்கு கட்டணமின்மை ஆகியவற்றுடன், வங்கியின் நவீன முதலீட்டுத் தளமான டிஜிபோர்ட்ஃபோலியோவை எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் சேவைகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
இந்தப் புதிய அறிமுகம் குறித்து.டிபிஎஸ் அஸ்பயர், வளர்ந்து வரும் உயர் வகுப்பினருக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டிபிஎஸ் வங்கியின் முதல் திட்டம் ஆகும்.வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகள் வளரும்போது அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களது செல்வத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது ஒரு வங்கி அவர்களுக்கு நம்பகமான பங்குதாரராக இருக்க முடியும் என்ற எங்களது நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது”.
டிபிஎஸ் அஸ்பயர் திட்டத்தின் ஒரு பகுதியாக, டிபிஎஸ் அஸ்பயர் டெபிட் கார்டைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் செய்யும் செலவுகளுக்கு அந்நிய செலாவணிக் கட்டணம் முற்றிலுமாக இல்லை; மேலும், அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், இதர சேவைகளுக்கும் கட்டணம் இல்லை.ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனக்கான ஒரு பிரத்தியேக ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் தொடர்பு கொள்ளும் வசதியை இத்திட்டம் வழங்குகிறது.
இது பொதுவாக உயர்தர ப்ரீமியம் வங்கித் திட்டங்களில் மட்டுமே வழங்கப்படும் ஒரு சேவையாகும்.ரூ. 2 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்கு இருப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது; இது பெரும்பாலான முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை விடக் கணிசமான அளவு அதிகமாகும்.ரூ. 30 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பை வங்கியில் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் தற்போதைய வெல்த் திட்டமான ‘டிபிஎஸ் ட்ரெஷர்ஸ்’ திட்டத்தை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில் டிபிஎஸ் அஸ்பயர் திட்டம் அமைந்துள்ளது. டிபிஎஸ் ட்ரெஷர்ஸ் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட முழுமையான வெல்த் மேனேஜ்மென்ட் தீர்வுகள், அனுபவமிக்க ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள் மற்றும் பிரத்தியேக சலுகைகளை டிபிஎஸ் தளத்தின் நம்பகமான பலன்களுடன் பெறலாம்.