• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீடு

March 13, 2026 தண்டோரா குழு

கோவையில் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர் வி ஹோட்டல் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் வெற்றி முழக்கம், வெற்றியின் ஓசை,துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நூல்களை பகுப்பாய்வு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்,தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் எழுதிய பன்முக ஆய்வு கட்டுரைகள் என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கே.கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை, பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முதல்வர், முனைவர் க. முருகேசன் வரவேற்றார்.

முதல் பிரதியை கோவை,பாரதியார் பல்கலைக்கழக,பதிவாளர்,முனைவர் ஆர். ராஜவேல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

முதல் பிரதியை கோவை,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முதல்வர் மற்றும் செயலாளர், பி.எல். சிவகுமார் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெற்றியின் ஓசை,வெற்றி முழக்கம், துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் பன்முக ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றின் நூல் அறிமுக உரையை முறையே கோவை, மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின், தமிழாசிரியர், ஜி.கருணாநிதி,கோவை, கவிஞர் மீ.உமா மகேஸ்வரி,பொள்ளாச்சி, இலக்கிய வட்டம்,செயலாளர்,கவிஞர் இரா. பூபாலன் மற்றும் கோவை,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்,தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் ஆகியோர் வாசித்தனர்.

இதுவரை சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்கள் 90க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனரும், புத்தகம் ஆசிரியருமான சிந்தனை கவிஞர் கவிதாசன் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

மேலும் படிக்க