March 12, 2026
தண்டோரா குழு
PSG பல்தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் நிறுவப்பட்டுள்ள PSG – Fuji ஆற்றல் மற்றும் தானியக்க சிறப்புத்திறன் மையம் துவக்க விழா நடைபெற்றது.
இந்த மையத்தை Fuji Electric India Private Limited நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் Chief Business Officer கே.ஜி. தீனதயாளன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அந்த நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் திருமதி திவ்யா ராமன் மற்றும் நிறுவன குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. கிரிராஜ்,மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ். சசிகலா, துறை ஆசிரியர்கள், பல்வேறு துறைகளின் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் நவீன Programmable Logic Controller (PLC) மற்றும் Electric Drives போன்ற தொழில்துறை தானியக்க உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் ஆற்றல் மேலாண்மை மற்றும் தானியக்கத் தொழில்நுட்பங்களில் நடைமுறை அனுபவத்தை பெற முடியும்.
மேலும், Fuji Electric India Private Limited நிறுவனம் தனது சமூக பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையத்திற்கான தேவையான உபகரணங்களை வழங்கியுள்ளது.
கல்வி மற்றும் தொழில்துறை நடைமுறைகளுக்கிடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு நவீன தானியக்க சூழலுக்கு ஏற்ப செய்முறை பயிற்சி மற்றும் தொழில் சார்ந்த திறன்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.