March 7, 2026
தண்டோரா குழு
வால்மார்ட் மார்க்கெட்பிளேஸ், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் ‘வால்மார்ட் குரோத் சம்மிட்: இந்தியா செல்லர் டே’ என்ற வளர்ச்சி மாநாட்டை நடத்தியது.
சிறு மற்றும் குறு ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச சந்தைகளில் நுழைவதற்கும், தங்களது வியாபாரத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகள், சர்வதேச வர்த்தகத்திற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான இந்த மாநாடு நடத்தப்பட்டது. திருப்பூர் மற்றும் கரூர் உள்ளடக்கி கொங்கு மண்டலத்தில் சிறந்து விளங்கும் ஜவுளித் தொழில் மற்றும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்குப் பெயர் பெற்ற கோவை, ஏற்றுமதி சார்ந்த வணிகங்களுக்கான ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
இங்கு 35.3 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஆண்டுக்கு 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது வால்மார்ட் மார்க்கெட்பிளேஸ் தளத்திற்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். எனவே, இந்தத் தளத்தின் மூலம் கிடைக்கும் உலகளாவிய வாய்ப்புகள் குறித்து உள்ளூர் விற்பனையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
‘மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்றும்’ மத்திய அரசின் திட்டத்திற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுதல், தளத்தில் இணைதல், சரக்குப் போக்குவரத்து மற்றும் அமெரிக்கச் சந்தையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட மூத்த தலைவர்கள், மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களை உலகளாவிய ஆன்லைன் வணிகத்தில் பங்கேற்கச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
சர்வதேச வர்த்தகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வெற்றிபெறத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதில் வால்மார்ட் மார்க்கெட்பிளேஸ் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் இணை இயக்குனர் ஆனந்த் மோகன் மிஸ்ரா கூறுகையில்,
“இந்தியாவின் ஏற்றுமதியை விரிவுபடுத்த, மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களை உலகளாவிய ஆன்லைன் வணிகத்தில் பங்கேற்கச் செய்வது மிகவும் அவசியமாகும். வால்மார்ட் மார்க்கெட்பிளேஸ் போன்ற தளங்கள் வழங்கும் இதுபோன்ற திட்டங்கள், சர்வதேச அளவில் போட்டியிடத் தேவையான திறன்கள் மற்றும் வளங்களை இந்த நிறுவனங்களுக்கு வழங்க உதவுகின்றன. உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும், உள்ளூர் வணிகங்களை உலக அளவில் முன்னேற்றவும் இந்த முயற்சிகள் மிகவும் முக்கியமானவை,” என்றார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவரும், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவருமான பி. கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,
“உலகளாவிய வர்த்தகம் அதிக அளவில் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், சர்வதேச சந்தைகளுக்கான கதவுகளைத் திறக்கும் தளங்களை நமது நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வது மிக முக்கியம் ஆகும். கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதியாளர்களை இணைத்து, ஆன்லைன் வணிகம் மூலம் கிடைக்கும் பரந்த வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வால்மார்ட் மார்க்கெட்பிளேஸின் இந்த முயற்சியை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.
வால்மார்ட்டின் இந்தியா கிராஸ் பார்டர் டிரேட் குழும இயக்குனர் ஆஷின் மேத்யூ கூறுகையில்,
“இந்தியாவின் மிகச்சிறந்த ஜவுளி மற்றும் உற்பத்தி மையங்களில் ஒன்றாகக் கோயம்புத்தூர் உள்ளது. இந்த மாநாட்டின் மூலமாக, வால்மார்ட் மார்க்கெட்பிளேஸில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.