• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போகனில் வென்றது ஜெயம் ரவியா?அரவிந்த் சாமியா?

February 3, 2017 tamilsamayam.com

” போகன் ” திரைப்படத்தில் ஜெயம் ரவியை விட அரவிந்த சாமி நடிப்பு சிறப்பாக இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி-அரவிந்த் சாமி கூட்டணி இணையும் படம் என்பதால் “போகன்” திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.போகனில் இயக்குநர் ” ரோமியோ-ஜூலியட் ” படத்தை இயக்கிய லக்‌ஷ்மண் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல வேட்டையாக இருக்கும் என்றே கூறப்பட்டது.அதற்கேற்றவாறு போகன் திரைப்படம் நேற்று வெளியாகி,நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

கூடு விட்டு கூடு பாய்வது என்ற பேண்டசி விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மண்.போகனில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த சாமிக்கு சம பலமான கதாபாத்திரம் என்றாலும்,பெரும்பாலான காட்சிகளில் அரவிந்த சாமியே ஸ்கோர் செய்வதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தனி ஒருவனில் அமைதியான வில்லனாக வந்து அசத்திய அரவிந்த சாமி,இந்த படத்தில் ஆர்ப்பாட்டமான வில்லனாக வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார்.ஏற்கனவே பல போலிஸ் கதாபாத்திரங்களில் ஜெயம் ரவியை பார்த்துவிட்டதால்,இந்த படத்தில் அவருடைய நடிப்பு அலுத்து விட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஹீரோ நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால்,அவருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.எடுத்துக்காட்டுக்கு மங்காத்தா படத்தில் அஜித் நடித்த நெகட்டிவ் ரோலை கூறலாம்.ஏற்கனவே தனி ஒருவனில் நெகட்டிவ் ரோல் மூலம் பட்டையக் கிளப்பிய அரவிந்த் சாமி,போகன் படத்திலும் தனி முத்திரை பதித்துள்ளார்.இதை பிரதிபலிக்கும் வகையில் டிவிட்டர்,பேஸ்புக்கிலும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க