• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாணவர்கள் தேர்தல் அறிக்கை (தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் -2026) வெளியீடு

February 3, 2026 தண்டோரா குழு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு sio கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மாணவ இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஒழுக்க விழுமியங்களை மேலோங்க செய்வதற்காகவும் பாடுபட்டு வருகிறது.

அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் “மாணவர்கள் தேர்தல் அறிக்கை (தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் -2026)” செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அதேபோல ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முகமது ஜாபர், கோவை மாவட்ட அமைப்புச்செயலாளர் ஹிஷாம், மாவட்ட செயலாளர் அனஸ் ரஹ்மான் மற்றும் மாவட்ட கல்வி வளாக செயலாளர் ஜமீல் ஆகியோர் கோவை ஆடிஸ் வீதியில் அமைந்துள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டனர்.

மேலும் படிக்க