• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

February 2, 2017 தண்டோரா குழு

புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் தங்களுக்கு சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் கடலுக்கு புதன்கிழமை இரவு சென்றுள்ளனர். இந்திய இலங்கை எல்லை அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் மீனவர்கள் 5 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு அருகே வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அப்போது அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

அதன் பின் அவர்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் விசாரணைக்கு பின் அபராதம் விதித்து விடுவிக்கப்படுவார்களா அல்லது இலங்கை சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை.

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், மேலும் 5 மீனவர்களை தற்போது சிறைபிடித்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க