January 20, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் மிகவும் நம்பகமான, முன்னணி ஆம்னி சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது குடியரசு தின விற்பனையை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள்,லேப்டாப்கள்,டிவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆடியோ சாதனங்கள் என அனைத்திற்கும் இதுவரை இல்லாத அதிரடி விலைக்குறைப்பு சலுகையை க்ரோமா வழங்குகிறது.இந்த பிரத்தியேக சலுகை விற்பனை ஜனவரி 26 வரை அனைத்து க்ரோமா விற்பனை நிலையங்களிலும் நடைபெற உள்ளது.
இந்த குடியரசு தின விற்பனையில், இந்தியா முழுவதிலும் உள்ள க்ரோமா விற்பனை நிலையங்களில் வங்கிகளின் கேஷ்பேக் ஆஃபர்கள்,பழைய சாதனங்களை மாற்றும்போது கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக சலுகைகள் எனப் பல நன்மைகள் க்ரோமா வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன.சுலமான முறையில் செலுத்தும் மாதாந்திர தவணைக் கட்டணம் வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் இந்தாண்டின் பெரும் மதிப்பு மிக்க எலக்ட்ரானிக்ஸ் விற்பனை கொண்டாட்டமாக இது இருக்கும். ப்ராண்ட்கள், தயாரிப்புகள்,அவற்றின் மாடல்கள்,விற்பனை நிலையங்கள், விற்பனை நாட்கள், நகரங்கள் இவற்றைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம், அதேபோல் சலுகைகள் வழங்கும் வங்கிகள் அல்லது நிதியுதவி நிறுவனங்களைப் பொறுத்தும் விலைகள் மாறுபடலாம். இதன் மூலம் குறிப்பாக,ஹெச்டிஎஃப்சி டாடா நியோ கார்டு வைத்திருப்பவர்கள் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கூடுதல் 10% வரை சேமிக்க முடியும். இந்த சலுகை இந்த கொண்டாட்ட தருணத்தின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சிக்கு உரியதாக்குகிறது.
ஏராளமான ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்புகள் இருந்தாலும் இந்த விற்பனையின் முக்கிய ஈர்ப்பாக ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. க்ரோமா வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது இந்த சிறப்பு விற்பனை.குடியரசு தின சிறப்பு விற்பனையை முன்னிட்டு ரூபாய் 82,900-க்கு அறிமுகமான ஐபோன் 17 மாடலை, எக்ஸ்சேஞ்ச் மற்றும் கேஷ்பேக் சலுகைகளுக்குப் பிறகு வெறும் ரூபாய் 47,990-க்கு உங்கள் வசமாக்கலாம். உங்களுடைய பழைய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ரூபாய் 23,500 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு [போன் மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலையைப் பொறுத்து] வழங்கப்படுகிறது.ரூபாய் 2,000 பேங்க் கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.
கூடுதலாக ரூபாய் 8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ரூபாய் 47,990 என்ற விலையில் நீங்கள் போன்களைப் பெறலாம். இதேபோல் ஐபோன் 15 மாடலும் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது . ஐபோன் 15-ன் இதன் தற்போதைய சந்தை விலை ₹59,900.ஆனால் சலுகைகள் போக இதனை ரூபாய்31,990-க்கு வாங்க முடியும். உங்களுடைய பழைய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ரூபாய் 14,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு [போன் மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலையைப் பொறுத்து] வழங்கப்படுகிறது.ரூபாய் 1,000 பேங்க் கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.
கூடுதலாக ரூபாய் 4,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ரூபாய் 31,990 என்ற விலையில் நீங்கள் போன்களைப் பெறலாம்.