• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது

February 1, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு முறையில் நீட் தேர்வைத் தவிர்த்து பழைய முறையே தொடர்வதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இதையெடுத்து, இந்த சட்டத்தின் மூலம் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்தில் விலக்கு அளிக்கும்படியான சட்ட முன்வடிவினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று தாக்கல் செய்தார்.

இதைதொடர்ந்து அந்த சட்ட மசோதா விவாதத்துக்குப் பின்னர் புதனன்று ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனப்பால் அறிவித்தார். இந்த சட்ட மசோதா நீட் தேர்வின்றி பழைய முறையையே பின்பற்றி 12ஆம் வகுப்பு கட் ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க