• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணக்கார வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய ஐவரி திட்டம்: உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்

December 17, 2025 தண்டோரா குழு

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இன்று இந்தியாவின் பணக்கார வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஐவரி என்ற வங்கித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை அவர்களின் வாழ்க்கை முறை வசதிகளுடன் ஒருங்கிணைக்கிறது, மேம்பட்ட பரிவர்த்தனை திறன்கள், உலகளாவிய பயன்பாடு மற்றும் முக்கிய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளில் பூஜ்ஜிய கட்டண வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. விரிவான நுகர்வோர் ஆராய்ச்சி அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஐவரி திட்டம், தங்கள் வாழ்க்கை முறை வசதிக்கு ஏற்ப ஒத்துப்போகும் நிதித் தீர்வுகளைத் விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு, டிஜிட்டல் வங்கிச் சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் உணவு விடுதிகளுக்கான சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது.ஐவரி உறுப்பினர் சேர்க்கை, கிளப் மேரியட் மூலம் விருந்தோம்பல் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 350க்கும் மேற்பட்ட பிரீமியம் மேரியட் ஓட்டல்களில் உணவருந்த மற்றும் தங்குவதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இதன் உறுப்பினர்களுக்கு உலக அளவில் பயன்படுத்தும் வகையிலான பிரீமியம் மெட்டல் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வருடாந்திர ஓடிடி சந்தா, காலாண்டு புக்மைஷோ வவுச்சர்கள் மற்றும் தகுதிவாய்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு கூடுதல் போனஸ் பாயிண்ட்டுகள் கிடைக்கும். இந்த போனஸ் பாயிண்ட்களை அவர்களுக்கு விருப்பமான பிராண்டுகளை வாங்கும்போது பயன்படுத்தலாம்.கூடுதல் நன்மையாக முக்கிய வங்கி சேவைகளில் பூஜ்ஜிய கட்டணங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிதி திட்டமிடல் மற்றும் உதவிக்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு பிரத்யேக உறவு மேலாளரை நியமித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

இது குறித்து உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் சில்லறை பொறுப்புகள் துறைத் தலைவர் ஹிதேந்திர ஜா கூறுகையில்,

அதிகரித்து வரும் பணக்காரப் பிரிவு வாடிக்கையாளர்கள், சிறந்த வங்கிச் சேவைகளை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. பலர் அதிக இருப்புத் தேவைகள், சிறந்த சேவை இன்மை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகாத பொதுவான போனஸ் திட்டங்களை எதிர்கொள்கின்றனர். ஐவரி இந்தச் சவால்களை சிறந்த சலுகைகள், அர்ப்பணிப்புள்ள உறவு மேலாளர்கள் மற்றும் முக்கிய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளில் பூஜ்ஜிய கட்டணம் ஆகியவற்றின் மூலம் நிவர்த்தி செய்கிறது, இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வங்கியின் ஐவரி திட்டம் சில்லறை வங்கி சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பிரீமியம் சலுகைகளுக்கு அப்பால், நம்பிக்கையை வலுப்படுத்துதல், நீண்டகால உறவுகளை வளர்ப்பது மற்றும் வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் ஆதரவை வழங்குவது என்ற வங்கியின் தொலைநோக்குப் பார்வையை இது பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க