• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவராக வினோத் ராய் நியமனம்

January 30, 2017 tamilsamayam.com

பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவின் தலைவராக வினோத் ராயை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகிகளாக ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. அதையடுத்து பிசிசிஐயில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து உயர் நீதிமன்றதால் அமைக்கப்பட்ட லோதா குழு பரிந்துரை செய்தது. ஆனால், அதை அமல்படுத்தத் தவறியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த அனுராக் தாகூர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து, உத்தரவிட்டது.

இதையடுத்து, புதிதாக நிர்வாகிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த சிலர் 70 வயதைக் கடந்தவராக இருந்ததால் அதை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் பிசிசிஐ புதிய நிவாகக் குழு தலைவராக வினோத் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் பிசிசிஐ நிர்வாகிகளாக ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயே ஆகியோரை நியமித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.

இதில் வினோத் ராய் மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க