September 17, 2025
தண்டோரா குழு
எலும்பு முறிவு,மூட்டு வலி மற்றும் ஆறாத புண்களுக்கான சிகிச்சையில் நவீன முறையிலான சிறிய ஊசிகள் மூலம் வழங்கப்படும் சிகிச்சைகள் நன்கு பயனளிப்பதாக மருத்துவர் சாமுவேல் அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை நூறடி சாலையில் செயல்பட்டு வரும்,பெத்தேல் மருத்துவமனை எலும்பியல் நிபுணர் டாக்டர் A.சாமுவேல் அனந்தராஜ் எலும்பு முறிவு,மூட்டு வலி மற்றும் ஆறாத புண்களுக்கான சிகிச்சையில் புதிய முறைகளை பயன்படுத்தி வருகிறார்.
கத்தியின்றி இரத்தமின்றி மருத்துவர் அனந்தராஜ் செய்து வரும் இந்த சிகிச்சை முறையை தற்போது வயது வித்தியாசலின்றி பலரும் விரும்ப துவங்கி உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பெத்தேல் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராஜபாண்டியன்,
பேசுகையில் நீண்ட நாட்கள் வலியால் அவதி படுபவர்களுக்கு இந்த நவீன முறை சிகிச்சை உடனடி நிவாரணம் அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் சாமுவேல் கூறுகையில்,
ஹைட்ரோஜோன் எனும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இணைத்து செய்யப்படும் இந்த புதிய வகை தெரபி சிகிச்சையை, செய்வதால் முதிய நோயாளிகள், அறுவை சிகிச்சையின்றி அதே நாளில் நின்று நடக்கும் அளவுக்கு முன்னேற்றம் பெறுவதாக தெரிவித்தார்.
இதே போல முகர்ஜி முறை எனும் முறையில், மூட்டு வலி, தோள்பட்டை இறுக்கம், கழுத்து / முதுகு வலி, பாத வலி, தசைநார் குருத்தெலும்பு காயங்கள், முடக்குவாதம் / சரவாங்கி சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் மற்றும் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
நவீன முறையில் வழங்கப்படும் இந்த சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர்க்க உதவுவதோடு, விரைவில் நடக்கவும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பெரிதும் உதவுகின்றன என அவர் தெரிவித்தார்.