September 17, 2025
தண்டோரா குழு
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமது பொறுப்புகள் என்பது மாறிக் கொண்டே வருகிறது. நமது இளமைப் பருவத்தில், நாம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் கவனம், குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் போன்ற நமது குடும்பங்களைப் பாதுகாப்பதில் அதிக ஈடுபாடு செலுத்துகிறோம்.
இந்தக் காலக்கட்டத்தில் நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து நமது பிரியமானவர்களை பாதுகாக்க சிறந்த ஆயுள் காப்பீடு என்பது மிக முக்கியமானது. ஓய்வு காலம் நெருங்கும்போது,தேவைகள் உருவாகின்றன.குழந்தைகள் சுதந்திரமாக செயல்படத் துவங்குகிறார்கள், கடன்கள் அடைக்கப்படுகின்றன.மேலும் வசதியான, கவலையற்ற ஓய்வு வாழ்க்கைக்கு நிலையான வருமானத்தை உருவாக்குவதில் நமது கவனம் மாறுகிறது.
இந்த மாற்றம் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது: அது இன்றைய பாதுகாப்பு தேவையை நாளைய நிதித் தேவையாக சமநிலைப்படுத்துவது எப்படி? என்பதுதான். இதை நிவர்த்தி செய்வதற்காக, இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முழு ஆயுள் சேமிப்புத் திட்டமான டாடா ஏஐஏ சுப் மஹா லைப் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.சுப் மஹா லைப், காப்பீடுதாரர்கள் தங்கள் குடும்பங்களை இன்று பாதுகாக்கவும், நாளைக்கான பணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.
நீங்கள் அதிக வருமானம் ஈட்டும் காலங்களில் – பொறுப்புகள் அதிகமாக இருக்கும்போது – அதிக ஆயுள் காப்பீடு நிதி சார்ந்த விஷயங்கள் குறையும் போது – ஓய்வு காலத்தில் குறைக்கப்பட்ட காப்பீடு. பங்கு முதலீடுகள் மூலம் வரி இல்லாத ஓய்வூதிய வருமானம்.தீவிர நோய் பாதுகாப்பு – பிற்காலங்களில் சுகாதாரத் தேவைகளைப் பாதுகாத்தல்.டாடா ஏஐஏவின் பரவலாகப் பாராட்டப்பட்ட மஹா லைப் திட்டத்தின் மரபை அடிப்படையாகக் கொண்டு சுப் மஹா லைப் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இன்றைய நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட நன்மைகளையும் முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறது.பல சாதனங்களுக்கு மாற்றாக ஒரு ஸ்மார்ட்போன் வாழ்க்கையை எளிதாக்குவது போல, சுப் மஹா லைப் பல்வேறு இலக்குகளை ஒரே தீர்வின் மூலம் நிவர்த்தி செய்வதன் மூலம் நிதித் திட்டமிடலை நெறிப்படுத்துகிறது.
இது குறித்து டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் தலைமை வங்கி காப்பீட்டு அதிகாரி கமல் பரத்வாஜ் கூறுகையில்,
எங்கள் நுகர்வோரின் ஒவ்வொரு காலக்கட்ட தேவைகளை அறிந்து நாங்கள் சுப் மஹா லைப் திட்டத்தை வடிவமைத்து உள்ளோம். காப்பீடுதாரர்களின் மிக முக்கியமான காலங்களில் சிறந்த பாதுகாப்பை வழங்குதல், ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க, வரி இல்லாத வருமானத்தை உறுதி செய்தல் மற்றும் கடுமையான நோய்களுக்கு நீண்டகால காப்பீட்டை வழங்குதல். உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிலையான பாதுகாப்பு, நிதி வளர்ச்சி மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்த காப்பீடு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.