August 27, 2025
தண்டோரா குழு
கோவை வடக்கு மாவட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாபுரி நகரில் உள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனை படியும்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் மூலனூர் கார்த்தி ஆகியோரின் வழிகாட்டுதல் படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் சுமார் 500 பக்தர்களுக்கு மதநல்லினக்கத்தை வலியுறுத்தும் வகையில் அன்னதானம் வழங்கினார்.
மேலும் கீரணத்தம் கரட்டுமேடு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் பராமரிப்பு செலவாக நிதி உதவி வழங்கினார்.