January 30, 2017
tamilsamayam.com
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கடைசி நேரத்தில் ஹீரோவாக ஜொலித்த பும்ராவை, அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் குறுகிய தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி சரிவை சந்தித்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி நாக்பூரில் நடந்தது.
இதில் கடைசி ஓவர் பும்ராவின் ஹீரோ ரோலால், 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவருக்கு பாராட்டு பலரிடம் இருந்தும் குவிந்து வருகிறது. இதில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக், தனது டுவிட்டர் மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில், பும்ரா இனி பும்ராஜீயாக மாறிவிட்டார். சிறந்த கடைசி ஓவர்களில் இதுவும் ஒன்று,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.